நிதிநிலையை சரிசெய்ய படிப்படியாக நடவடிக்கை: தமிழக நிதித்துறை செயலர் தகவல்

நிதிநிலையை சரிசெய்ய படிப்படியாக நடவடிக்கை: தமிழக நிதித்துறை செயலர் தகவல்
Updated on
1 min read

சென்னை: ‘தமிழக அரசின் நிதி​நிலையை சரிசெய்ய படிப்​படி​யாக நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது’ என்று நிதித்​துறை செயலர் எம்​.ஏ.சித்​திக் தெரி​வித்​தார்.

பட்​ஜெட்​டில் உள்ள முக்​கிய அம்​சங்​கள் தொடர்​பாக நிதித்​துறை செயலர் எம்​.ஏ.சித்​திக் தலை​மைச் செயல​கத்​தில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கடந்த 3 மாதங்​களுக்கு முன்பு அரசின் நிதி​நிலைமை மிக​வும் இக்​கட்​டான நிலை​யில்​தான் இருந்​தது.

நிதி​நிலையை சரிப்​படுத்த வரு​வாய் ஆதா​ரங்​களை பெருக்​கு​வது, செல​வினங்​கள் குறைப்பு உள்​ளிட்ட பல்​வேறு நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்​டன. நிதி நிலை​மையை ஒரே ஆண்​டில் சீர்​செய்​து​விட முடி​யாது. குறைந்​த​பட்​சம் 2 ஆண்​டு​களாவது ஆகும். அவசரப்பட்டு பெரிய அளவி​லான செல​வு களை குறைத்​தால், அரசின் அடிப்​படை பணி​கள் பாதிக்​கப்​படும்.

மத்​திய அரசிட​மிருந்து ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு நிலு​வைத்​தொகை வரவேண்​டி​யுள்​ளது. டாஸ்​மாக் கடைகள் வாயி​லாக ரூ.1,500 கோடி வந்​தது.

பதிவுத்​துறை​யில் வழி​காட்டு மதிப்பு குறை​பாடு​கள் கண்​டறியப்​பட்டு முத்​திரைத்தாள் வரு​வாயை அதி​கரிக்க நட வடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

வணி​கவரித்​துறை வரு​வா​யிலும் கூடு​தல் கவனம் செலுத்தி வரு​கிறோம். ஜிஎஸ்டி நடவடிக்​கை​யால் ரூ.4,500 கோடி கூடு​தலாக கிடைக்​கும் என நம்​பு​கிறோம். பத்​திரப்​ப​திவுத் துறை​யில்​தான் கட்​ட​ணங்​களை உயர்த்தி வரு​வாயைப் பெருக்​கும் வாய்ப்பு உள்​ளது.

நமது மொத்த பற்​றாக்​குறை ரூ.1.22 லட்​சம் கோடி. இது மாநில ஜிடிபி​யில் 3 சதவீதத்​துக்​கும் குறைவு​தான். அது கடன் வரம்​புக்​குள்​தான் உள்​ளது. கடந்த ஆண்டு நில​வரப்​படி அரசின் கடன் சுமை ரூ.10 லட்​சம் கோடி. கடன் அளவு ஆண்​டு​தோறும் கூடிக்​கொண்​டே​தான் போகும். கடந்த ஆண்டு கடன் அளவு, வரு​வாயை விட 3.4 மடங்​காக இருந்​தது. இந்த ஆண்டு அது 3.17 மடங்​காக குறை​யும். செல​வினங்​களைக் குறைக்க வேண்​டும் என்​ப​தற்​காக பட்​ஜெட்​டில் மக்​கள் நலத்​திட்​டங்​களுக்​கான நிதி ஒதுக்​கீடு குறைக்​கப்​பட​வில்​லை.

டாஸ்​மாக் மது​பான விற்​பனை மூலம் கடந்த ஆண்டு ரூ.51 ஆயிரம் கோடி வரு​வாய் கிடைத்​தது. இந்த ஆண்டு ரூ.55 ஆயிரம் கோடி கிடைக்​கும் என எதிர்​பார்க்​கிறோம். கடந்த 3 மாதங்​களில் சுமார் 21 ஆயிரம் கோடி கடன் பெறப்​பட்​டுள்​ளது. முந்​தைய காலாண்​டுடன் அடுத்த காலாண்டை ஒப்​பிடக் கூடாது. ஒட்​டுமொத்​த​மாக இந்த நிதி ஆண்​டில் ரூ.1.22 லட்​சம் கோடி கடன்​ பெற திட்​ட​மிட்​டுள்​ளோம்​. இவ்​வாறு அவர்​ கூறினார்.

நிதிநிலையை சரிசெய்ய படிப்படியாக நடவடிக்கை: தமிழக நிதித்துறை செயலர் தகவல்
தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர்: ரூ.812 கோடியில் ‘அண்ணன் சீர்’ திட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in