

கோப்புப் படம்
புதுச்சேரி: தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை வரும் 29-ம் தேதி வரை நீட்டித்து புதுச்சேரி தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
சகோதரர் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து தாக்கியதாக நிதியமைச்சர் மரிய வில்சன் மீதான புகார் குறித்து புதுவை லாஸ்பேட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடந்து வந்தது. நீதித்துறை நடுவர் சேரலாதன் இடமாற்றம் செய்யப்பட்டதால் இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நடுவர் சந்திரசேகர் விசாரித்து வருகிறார்.
மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை வேறு நீதிமன்றங்கள் விசாரிக்க நடத்த முடியாது, அதனால் இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடத்தக்கூடாது என்று மரிய வில்சன் தரப்பில் தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது.
இதையடுத்து ஏற்கெனவே இவ்வழக்கை 2 முறை விசாரித்த நீதிமன்றம் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வரும் 29-ம் தேதி வரை விசாரிக்க இடைக்காலத் தடை நீட்டிக்கப்பட்டது.
அதேநேரத்தில், ஏற்கெனவே இவ்வழக்கை விசாரித்து வரும் இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் சந்திரசேகர் இவ்வழக்கை வரும் 28-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.