​கால்நடை அவசர சிகிச்சைக்கு செல்லும் களப்பணியாளர்கள் முன்​அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை

தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தரவு
​கால்நடை அவசர சிகிச்சைக்கு செல்லும் களப்பணியாளர்கள் முன்​அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை
Updated on
1 min read

சென்னை: பாதிக்​கப்​படும் கால்​நடைகளின் அவசர சிகிச்​சைக்கு செல்​லும் களப்​பணி​யாளர்​கள் உயர​தி​காரி​களிடம் முன்​அனு​மதி பெற்றே செல்ல வேண்​டும் என்ற கால்​நடைத்​துறை இயக்​குநரின் உத்​தர​வுக்கு இடைக்​காலத் தடை விதித்​துள்ள உயர் நீதி​மன்​றம், இதுதொடர்​பாக தமிழக அரசு பதிலளிக்க உத்​தர​விட்​டுள்​ளது.

திரு​வண்​ணா​மலை மாவட்ட கால்​நடை உதவி மருத்​து​வர்​கள் சங்​கச் செய​லா​ள​ரான டாக்​டர் ஏ.செந்​தில்​கு​மார், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில் கூறி​யிருந்​த​தாவது: கால்​நடை விவ​சா​யிகளுக்கு தக்க நேரத்தில் ஆலோ​சனை வழங்​க​வும், நிர்​வாக வசதி​களுக்​காக​வும் தமிழக கால்​நடைத்​துறை​யில் ‘கால்​நடை வளம்’ என்ற மொபைல் செயலி கடந்த மார்ச் மாதம் அறி​முகம் செய்​யப்​பட்​டது.

இந்த செயலி மூல​மாக கால்​நடை விவ​சா​யிகள் தங்​களுக்கு ஏற்​படும் சந்​தேகங்​களை​யும், துறை​யின் பல்​வேறு திட்​டங்​கள் மற்​றும் செயல்​பாடு​களை​யும் உடனுக்​குடன் கால்​நடை மருத்​துவர்​களிடம் கேட்டு விளக்​கம் பெற முடியும்.

அவசர கால​கட்​டங்​களில் கால்​நடை மருத்​து​வர்​களை அணுக முடி​யும் என்​றாலும், கால்​நடை மருத்​து​வர்​கள் உள்​ளிட்ட அனைத்து களப்​பணி​யாளர்​களும் தங்​களுக்​கான வரு​கைப்​ப​திவேட்டை அந்​தந்த கால்​நடை மருத்​து​வ​மனைகளில் இருந்து இந்த செயலி வாயி​லாக காலை மற்​றும் மாலை வேளை​களில் முக வரு​கைப்​ப​திவேடு மூல​மாக பதிவு செய்ய வேண்​டும் என அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

ஒரு​வேளை அலு​வல் ரீதி​யாக வெளியூர் சென்​றாலோ அல்​லது களப்​பணி ஆய்​வு, முகாம் அல்​லது கால்​நடைகளுக்கு ஏற்​படும் பாதிப்​பு​கள் காரண​மாக அவசரப்​பணி​யாக வெளியே செல்ல நேரிட்​டாலும், இந்த செயலி மூல​மாக காரணத்தை தெரி​வித்து உயர​தி​காரி​களிடம் முன்​அனு​மதி பெற்றே செல்ல வேண்​டும் என உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

கால்​நடை மருத்​து​வர்​கள் உள்​ளிட்ட களப்​பணி​யாளர்​கள் அவசர கால​கட்​டங்​களில் ஒவ்​வொரு முறை​யும் உயர​தி​காரி​களிடம் முன்​அனு​மதி பெற்றே செல்ல வேண்​டுமென்​றால் கால்​நடைகளின் இறப்பு சதவீதம் அதி​கரித்து விடும். மேலும், இது​போன்ற முக வரு​கைப்​ப​திவேடு நிர்​வாக பணி​யாளர்​களுக்கு கட்​டாய​மாக்​கப்​பட​வில்லை என்​பதும் ஒருதலைபட்​ச​மானது.

எனவே, களப்​பணி​யாளர்​களுக்கு மட்​டும் கால்​நடை வளம்செயலி மூல​மாக முக வரு​கைப்​ப​திவேடு செய்ய வேண்​டும் என்​றும், அவசர கால​கட்​டங்​களி​லும் முன்​அனு​மதி பெற்றே வெளியேசெல்ல வேண்​டும் என்​றும் பிறப்​பிக்​கப்​பட்​டுள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்​பாக விசா​ரணைக்குவந்​தது. அப்​போது மனு​தா​ரர்தரப்​பில் வழக்​கறிஞர் ஆர்​.மகேஸ்​வரி​யும், அரசு தரப்​பில் சிறப்பு அரசுவழக்​கறிஞர் டி.சந்​திரசேகரனும் ஆஜராகி வாதிட்​டனர். இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி, அவசரப் பணி, கள ஆய்வு மற்​றும் முகாம்​களுக்கு செல்​லும் கால்​நடைத்​துறை களப்​பணி​யாளர்​கள் முன்​அனு​மதி பெற்றே செல்ல வேண்​டும் என்ற உத்​தர​வுக்கு மட்​டும் இடைக்​காலத் தடை விதித்​துள்​ளார். மேலும், இந்த வழக்​கில் அரசு தரப்​பில் பதிலளிக்க உத்​தர​விட்டு விசா​ரணையை ஜூலை 8-ம் தேதிக்கு தள்ளி வைத்​துள்​ளார்.

​கால்நடை அவசர சிகிச்சைக்கு செல்லும் களப்பணியாளர்கள் முன்​அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை
ஸ்கிரைப் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்: மாற்றுத் திறனாளிகளுக்கு என்டிஏ அறிவுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in