மாநகர காவல் ஆணையர், துணை ஆணையருக்கு நிர்வாக நீதிபதிக்கான அதிகாரம் வழங்கும் அரசாணைக்கு தடை

மாநகர காவல் ஆணையர், துணை ஆணையருக்கு நிர்வாக நீதிபதிக்கான அதிகாரம் வழங்கும் அரசாணைக்கு தடை
Updated on
1 min read

மதுரை: தமிழகத்​தில் மாநகர காவல் ஆணை​யர்​கள், துணை ஆணை​யர்​களுக்கு நிர்​வாக நீதிப​தி​களுக்​கான அதி​காரம் வழங்கி பிறப்​பிக்​கப்​பட்ட அரசாணைக்கு உயர்நீதி​மன்ற மதுரை அமர்வு இடைக்​காலத்தடை விதித்​தது.

மதுரை கோ.புதூரைச் சேர்ந்த நல்​லதம்பி உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: தமிழகத்​தில் மாநகர காவல் ஆணை​யர்​கள் மற்​றும் துணை ஆணை​யர்​களுக்கு நிர்​வாக நீதிப​தி​களுக்​கான அதி​காரம் வழங்கி தமிழக உள்​துறைச் செயலர் கடந்​தாண்டு அரசாணை பிறப்​பித்​திருந்​தார்.

காவல் துறை அதி​காரி​களுக்கு நிர்​வாக நீதிபதிகளுக்கான அதி​காரம் வழங்​கு​வது சட்​ட​ விரோதம். குறிப்​பாக ஜாமீன் பத்​திர விதி​மீறலில் ஈடு​பட்​டோருக்கு தண்​டனை வழங்​கும் அதி​காரம் நீதித் துறையைச் சேர்ந்​தது. அந்த அதி​காரத்தை காவல் துறை அதி​காரி​களுக்கு தரு​வது ஏற்​புடையது அல்ல.

எனவே, மாநகர காவல் ஆணை​யர்​கள், துணை ஆணை​யர்​களுக்கு நிர்​வாக நீதிப​தி​களுக்​கான அதி​காரங்​களை வழங்​கும் அரசாணையை செல்​லாது என அறி​வித்​தும், அரசாணையை செயல்​படுத்த இடைக்​காலத் தடை விதித்​தும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டிருந்​தது.

இந்த வழக்கை நீதிப​தி​கள் சதீஷ்கு​மார், ஜோதி​ராமன் அமர்வு விசா​ரித்​தது. மனு​தா​ரர் சார்​பில் வழக்​கறிஞர் ஆர்​.கருணாநிதி வாதிட்​டார். பின்​னர் நீதிப​தி​கள், ஏற்​கெனவே இது​போன்ற அரசாணை பிறப்​பிக்​கப்​பட்டபோது அதற்கு உயர் நீதி​மன்​றம் தடை விதித்​துள்​ளது.

தற்​போது மீண்​டும் அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. காவல் ஆணை​யர்​கள், துணை ஆணை​யர்​களுக்கு நிர்​வாக நீதிப​திக்​கான அதி​காரம் வழங்க வேண்​டிய அவசி​யம் என்ன, ஒரு​வருக்கு தண்​டனை வழங்​கு​வது நீதித்​துறை நீதிப​தி​களின் அதி​காரம்.

நீதித்​துறை அல்​லது நீதித்​துறை சார்ந்த பணி​களை காவல்​துறை அதி​காரி​களால் மேற்​கொள்ள முடி​யாது. இத்​தகைய அதி​காரம் வழங்​கல் அதி​காரப் பிரி​வினை கோட்​பாட்டை மீறு​வ​தாகும்.

பிஎன்​எஸ்​எஸ் சட்​டப்​பிரிவு 15-ன் கீழ் நிர்​வாக நீதிபதிகளை ஒரு குறிப்​பிட்ட காலத்துக்கு மட்​டுமே நியமிக்க முடி​யும். நிர்​வாக ஆணை​கள் மூலம் காவல்​துறை அதி​காரி​களுக்கு அத்​தகைய அதி​காரங்​களை கால​வரை​யின்றி வழங்க முடி​யாது.

இதனால், அரசாணைக்கு தடை விதிக்​கப்​படு​கிறது. மனு தொடர்​பாக உள்​துறைச் செயலர் பதில் மனு தாக்​கல் செய்ய வேண்​டும். விசா​ரணை தள்​ளிவைக்​கப்​படு​கிறது என உத்​தரவிட்​டனர்.

மாநகர காவல் ஆணையர், துணை ஆணையருக்கு நிர்வாக நீதிபதிக்கான அதிகாரம் வழங்கும் அரசாணைக்கு தடை
சொத்துக் குவிப்பு வழக்கு மறுவிசாரணைக்கு இடைக்காலத் தடை: துரைமுருகனுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in