உழவர்களை கண்டுகொள்ளாது ‘உதய’ விழா நடத்தும் அரசு: நயினார் நாகேந்திரன் விமர்சனம்

உழவர்களை கண்டுகொள்ளாது ‘உதய’ விழா நடத்தும் அரசு: நயினார் நாகேந்திரன் விமர்சனம்
Updated on
1 min read

சென்னை: பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், தனது எக்ஸ் தள பதிவில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகம் முழு​வதும் பெய்​து​ வரும் தொடர் மழை​யால் விளைபயிர்​கள் வீணாகி, விவ​சா​யிகள் விழிகளில் கண்​ணீர் குளம் போல் பெரு​கும் அவலம் ஏற்​பட்​டுள்​ளது.

நாகை​யில் 1,000 ஏக்​கர் தாளடிப் பயிர்​கள், திரு​வாரூரில் 7,000 ஏக்​கர் சம்பா நெற்​ப​யிர்​கள், திருத்​துறைப்​பூண்​டி​யில் 2,000 ஏக்​கர் நெற்​ப​யிர்​கள், தூத்​துக்​குடி​யில் 50,000-க்​கும் மேற்​பட்ட வாழைகள், கடலூரில் 300 ஏக்​கர் சம்பா பயிர்​கள், சிதம்​பரத்​தில் 750 ஏக்​கர் நெற்​ப​யிர்​கள், மயி​லாடு​துறை​யில் 300 ஏக்​கர் சம்பா பயிர்​கள் என பல்​லா​யிரக்​கணக்​கான ஏக்​கர் நிலங்​களில் பயிர்​கள் சேதமடைந்​துள்​ளன.

அவர்​களுக்கு தக்க இழப்​பீடு வழங்கி துயரைத் துடைக்க வேண்​டிய திமுக அரசோ துணை முதல்​வர் உதயநி​திக்கு பிறந்​த​நாள் விழா​வில் மும்​முர​மாக ஈடு​பட்​டுள்​ளது. உழவர்​களைக் கண்​டு​கொள்​ளாது, ‘உதய’ விழா கொண்​டாடும் திமுக அரசை விரை​வில் மக்​கள் தூக்​கியெறிவர். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

உழவர்களை கண்டுகொள்ளாது ‘உதய’ விழா நடத்தும் அரசு: நயினார் நாகேந்திரன் விமர்சனம்
வட தமிழகத்தை நவ.30-ல் நெருங்குகிறது ‘டித்வா’ புயல்: 4 மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in