கூட்ட நெரிசல் விசாரணை: கரூர் சுற்றுலா மாளிகைக்கு சிபிஐ டிஐஜி அதுல்குமார் தாக்கூர் வருகை

கரூர் சிபிஐ முகாம் அலுவலகத்திற்கு வந்த சிபிஐ டிஐஜி அதுல்குமார் தாக்கூர்

கரூர் சிபிஐ முகாம் அலுவலகத்திற்கு வந்த சிபிஐ டிஐஜி அதுல்குமார் தாக்கூர்

Updated on
1 min read

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கி சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், உச்ச நீதிமன்ற ஓய்வு நீதிபதி அஜய் ரஸ்தோகி வருகையை முன்னிட்டு சிபிஐ டிஐஜி அதுல்குமார் தாக்கூர் வருகை தந்துள்ளார்.

கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் அக்.13-ம் தேதி உத்தரவிட்டது.

அப்போது உச்ச நீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, ஐஜிக்கள் சோனல் வி.மிஸ்ரா, சுமித் சரண் ஆகியோர் மேற்பார்வையில் சிபிஐ அதிகாரி பிரவீண்குமார் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டது. அக்.16-ம் தேதி சிபிஐ கரூர் வந்த நிலையில் அக்.17-ம் தேதி எஸ்ஐடி ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைத்தது.

இவ்வழக்கில் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பியும், போனில் அழைத்தும், நேரில் சென்றும் கடந்த அக்.30-ம் தேதி முதல் வேலுசாமிபுரத்தில் கடை வைத்திருப்பவர்கள், ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், பவர் கிரிட், மின்வாரியம், நெடுஞ்சாலைத் துறை, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், சமூக வலைத்தளங்களில் இதுதொடர்பாக கருத்துகள் பதிவிட்டவர்கள், கரூர் நகர இன்ஸ்பெக்டர், டிஎஸ்பி செல்வராஜ் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.

நவ. 3-ம் தேதி சென்னை பனையூர் தவெக அலுவலகம் சென்று பிரச்சார வாகன காமரா பதிவுகள், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் விவரங்கள் கேட்டு சம்மன் வழங்கினர். இது தொடர்பான ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் தவெகவினர் வழங்கினர். தவெக தலைவர்களிடம் நவ.24, 25-ம் தேதிகளில் விசாரணை நடைபெற்றது.

இந்த நிலையில், சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட இன்று (டிச.1) உச்ச நீதிமன்ற ஓய்வு நீதிபதி அஜய் ரஸ்தோகி, ஐஜிக்கள் சோனல் வி.மிஸ்ரா, சுமித் சரண் ஆகியோர் வருகை தருகின்றனர். முன்னதாக, நேற்று கரூர் வருகை தந்த சிபிஐ டிஐஜி அதுல்குமார் தாக்கூர் கரூர் மாவட்டம் புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

இன்று (டிச.1) காலை விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு சிபிஐ அதிகாரிகள் தங்கி விசாரணை நடத்தி வரும் கரூர் சுற்றுலா மாளிகைக்கு 11 மணிக்கு வருகை தந்தார். உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, ஐஜிக்கள் சோனல் வி.மிஸ்ரா, சுமித்சரண் ஆகியோர் விமானம் மூலம் மதியம் 2.30 மணிக்கு கோவை வந்து, அங்கிருந்து மாலை கரூர் வருவதாகக் கூறப்படுகிறது.

<div class="paragraphs"><p>கரூர் சிபிஐ முகாம் அலுவலகத்திற்கு வந்த சிபிஐ டிஐஜி அதுல்குமார் தாக்கூர்</p></div>
‘எளிய விவசாய குடும்பத்தில் இருந்து உயர்ந்த நிலைக்கு வந்திருப்பவர் சி.பி. ராதாகிருஷ்ணன்’ - பிரதமர் புகழாரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in