ஸ்டாலின் மீண்டும் ஆட்சி அமைப்பார்: வைகோ நம்பிக்கை

நேர்காணலின்போது... படம்: எல்.சீனிவாசன்

நேர்காணலின்போது... படம்: எல்.சீனிவாசன்

Updated on
1 min read

போதைப்பொருள் ஒழிப்பு, சாதி மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி வரும் ஜன.2 முதல் 12-ம்தேதி வரை தான் மேற்கொள்ள் இருக்கும் சமத்துவ நடை பயணத்துக்கு எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் சென்னை மண்டலத்தைச் சேர்ந்தநிர்வாகிகளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று தேர்வு செய்தார்.

அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புகைப்பிடிப்பவர்களுக்கு, மது அருந்துபவர்களுக்கு இந்த நடைபயணத்தில் அனுமதி இல்லை. மருத்துவ வசதிகளும் பயணத்தின் போது மருத்துவர்களும் உடன்வருவது போன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என் எஞ்சிய நாட்களை மக்களுக்காக வாழ விரும்புகிறேன். கஞ்சா போன்ற போதைப் பொருட்களை ஒழிக்க இந்த நடைபயணம் நடைபெறவுள்ளது.

கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் வைத்திருந்தால் குறைந்தபட்சம் 10 ஆண்டு சிறை, பயன்படுத்தினால் 7 ஆண்டு சிறை என்று சட்டத்தை புதிதாக கொண்டு வந்து அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். கல்லூரிகளிலே சாதி சங்கங்கள் வைத்துள்ளார்கள், மோதல் ஏற்படுகிறது, வீச்சரிவாள், பட்டா கத்தியோடு சண்டை போடுகிறார்கள். இதை தடுக்கத்தான் ‘சமத்துவ நடைப்பயணம்’ எனதலைப்பை வைத்துள்ளேன். ஜன.2ம்தேதி திருச்சி மார்க்கெட் அருகேமுதல்வர் மு.க.ஸ்டாலின் நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார்.

காதர் மொய்தீன், செல்வப்பெருந்தகை, திருமாவளவன் உள்ளிட்டோர் வழி அனுப்ப உள்ளனர். மதுரையில் நடக்கும் நிறைவு நிகழ்வில் கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ், திருமுருகன் காந்தி உள்ளிட்ட முக்கிய நபர்கள், கூட்டணி தலைவர்கள் வாழ்த்துகின்றனர்.

பொதுமக்கள் பெருமளவில் வெள்ளம் போல கூடும்போது அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நிகழ்ச்சியை நடத்தும் தலைவருக்குத் தான். பொறுப்பு, பாதுகாப்பு உணர்வோடு தலைவர் தான் இருக்க வேண்டும். பாதிப்பு ஏற்பட்டால் குற்ற உணர்ச்சியோடு இருக்க வேண்டும். இழவு வீட்டுக்கு துக்கம் கேட்டுப் போவதுஎன்றால் அவர்களின் வீட்டுக்குத் தான் செல்ல வேண்டும்;

ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு அவர்களை நம் வீட்டுக்கு வரவழைத்து கேட்கக் கூடாது. இவையெல்லாம் பொது வாழ்வில் படித்துக் கொள்ள வேண்டிய பாடங்கள்; அரிச்சுவடி. யாரையும் குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இல்லை. விஜய்தன் கடமையை செய்யத் தவறிவிட்டார்.

திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படும் பல்வேறு சிறப்புத் திட்டங்களை அனைத்து மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன. மக்களுக்கான எண்ணற்ற நலத்திட்டங்களை திமுக செய்துவருகிறது.

நிச்சயம் மக்கள் புரிந்துகொள்வார்கள். வருகின்ற சட்டப்பேரவை தேர்தலிலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சி அமைப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>நேர்காணலின்போது... படம்: எல்.சீனிவாசன்</p></div>
கோவை, ஈரோடு மாவட்டங்களில் நவ. 25, 26-ம் தேதிகளில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப் பயணம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in