கோவை, ஈரோடு மாவட்டங்களில் நவ. 25, 26-ம் தேதிகளில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப் பயணம்

கோவை, ஈரோடு மாவட்டங்களில் நவ. 25, 26-ம் தேதிகளில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப் பயணம்
Updated on
1 min read

கோவை / ஈரோடு: கோவை, ஈரோடு மாவட்​டங்​களில் முதல்​வர் ஸ்டா​லின் வரும் 25, 26-ம் தேதி​களில் சுற்​றுப் பயணம் மேற்​கொண்​டு, பல்​வேறு அரசு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​கிறார்.

கோவை காந்​திபுரம் நஞ்​சப்பா சாலை​யில் உள்ள சிறைச்​சாலை வளாகத்​தில் 45 ஏக்​கர் பரப்​பில் ரூ.208.50 கோடி​யில் செம்​மொழிப் பூங்கா அமைக்​கப்​பட்​டுள்​ளது. வரும் 25-ம் தேதி இப்​பூங்​காவை மக்​கள் பயன்​பாட்​டுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் திறந்​து​வைக்​கிறார்.

மேலும், அன்று மாலை கோவை சின்​னி​யம்​பாளை​யத்​தில் உள்ள தனி​யார் ஹோட்​டலில் தொழில் துறை சார்​பில் நடை​பெறும் ‘டி.என்​-ரைஸ்’ என்ற நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​கிறார். வரும் 26-ம் தேதி காலை ஈரோடு மாவட்​டம் மொடக்​குறிச்சி ஜெய​ராமபுரத்​தில் ரூ.4.90 கோடி​யில் அமைக்​கப்​பட்​டுள்ள சுதந்​திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்​லானின் சிலை​யுடன் கூடிய அரங்கை முதல்​வர் திறந்​து​வைக்​கிறார்.

அதே​போல, ஓடாநிலை​யில் அமைந்​துள்ள சுதந்​திரப் போராட்ட வீரர் தீரன் சின்​னமலை​யின் மணி மண்டப வளாகத்​துக்​குச் சென்​று, மரி​யாதை செலுத்​துகிறார். பின்​னர், ஈரோடு மாவட்​டம் சோலார் புதிய பேருந்து நிலையவளாகத்​தில் நடை​பெறவுள்ள அரசு விழா​வில் ரூ.605 கோடி​யில் முடிவுற்ற திட்​டப் பணி​களைத் திறந்து வைத்​து, புதிய திட்​டப் பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டு​கிறார். அதே​போல, 1,84,491 பயனாளி​களுக்கு நலத்​திட்ட உதவி​களை வழங்​கு​கிறார்.

அன்று மாலை சித்​தோடுபால் பண்ணை வளாகத்​தில் ரூ.50 லட்​சம் மதிப்​பில் நிறு​வப்​பட்​டுள்ள, பால்​வளத் துறை​யின் தந்தை என்று போற்​றப்​படும் சி.கு.பரமசிவம் சிலை​யை​யும் திறந்து வைக்​கிறார்.

இந்த நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​ப​தற்​காக முதல்​வர் ஸ்டா​லின் வரும் 25-ம் தேதி காலை சென்​னையி​லிருந்து விமானம் மூலம் கோவை வரு​கிறார். கோவை​யில் நடை​பெறும் நிகழ்ச்​சிகளில்பங்​கேற்ற பின்​னர் இரவு ஈரோடு சென்று தங்​கு​கிறார்.

அடுத்த நாள் அரசு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்ற பின்​னர் இரவு ஈரோட்​டிலிருந்து கோவை வந்​து, அங்​கிருந்து வி​மானம்​ மூலம்​ சென்​னை புறப்​பட்​டுச்​ செல்​கிறார்​.

கோவை, ஈரோடு மாவட்டங்களில் நவ. 25, 26-ம் தேதிகளில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப் பயணம்
பள்ளிவாசலுக்கு மந்திரிக்க சென்ற இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்து கத்தியால் குத்தியவர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in