கோவையில் ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா

கோவையில் ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா
Updated on: 
1 min read

கோவை: பெரியார் அறி​வுல​கம் அமைத்​ததற்​காக கோவை​யில் தி.க. சார்​பில் இன்று நடை​பெறும் பாராட்டு விழா​வில் திமுக தலை​வர் மு.க.ஸ்டா​லின் பங்​கேற்​கிறார்.

கோவை அவிநாசி சாலை நீலாம்​பூர் பகுதி​யில் 50 சென்ட் பரப்​பளவில் கோவை மாவட்ட திமுகவுக்கு புதிய அலு​வல​கம் கட்​டப்​பட உள்​ளது. திமுக தலை​வர் மு.க.ஸ்டா​லின், இந்த அலு​வல​கத்​துக்கு இன்று (நவ.4) காலை 11 மணிக்கு அடிக்​கல் நாட்டி கட்​டு​மானப் பணியை தொடங்கி வைக்​கிறார்.

கடந்த திமுக ஆட்​சிக்​காலத்​தில் ரூ.300 கோடி மதிப்​பில், காந்​திபுரம் நஞ்​சப்பா சாலை​யில் பெரியார் அறி​வுல​கம் எனப்​படும் நூல​கம் மற்​றும் அறி​வியல் மையம் பிரம்​மாண்​ட​மாக கட்​டப்​பட்​டது. இதை சமீபத்​தில் முதல்​வர் விஜய் திறந்​து​வைத்​தார்.

கோவை​யில் பெரியார் பெயரில் அறி​வுல​கத்தை கட்​டித் தந்​ததற்​காக திராவிடர் கழகம் சார்​பில் ஸ்டா​லினுக்கு பாராட்டு விழா நடத்​தப்​படு​கிறது. கோவை வஉசி மைதானத்​தில் இன்று மாலை 6 மணிக்கு நடக்​கும் விழா​வில் ஸ்டா​லின் பங்​கேற்று சிறப்​புரையாற்​றுகிறார்.

இந்த நிகழ்​வு​களில் கலந்து கொள்​வதற்​காக ஸ்டா​லின் சென்​னை​யில் இருந்து புறப்​பட்டு விமானத்​தில் இன்று காலை 10.30 மணிக்கு கோவை வரு​கிறார். இரு நிகழ்​வு​களை​யும் முடித்​துக் கொண்டு இரவு 8.30 மணிக்கு சென்னை திரும்​பு​கிறார்.

கோவையில் ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா
கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு

X