“அடுத்த ஒரு நூற்றாண்டுக்கான தமிழகத்தின் புதிய வரலாற்றை எழுதுவோம்” - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

“அடுத்த ஒரு நூற்றாண்டுக்கான தமிழகத்தின் புதிய வரலாற்றை எழுதுவோம்” - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
Updated on
1 min read

சென்னை: ‘அடுத்த ஒரு நூற்​றாண்​டுக்​கான நமது வரலாற்​றை​யும், தமிழகத்​தின் புதிய வரலாற்​றை​யும் நாம் ஒருசேர எழுத வேண்​டும்’ என்று திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து கட்​சித் தொண்​டர்​களுக்கு அவர் எழு​திய கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: தேர்​தல் தோல்​வி​யால் நான் துவண்​டு​விட​வில்​லை. எனினும், சோர்வு நம்மை அண்​டாத​வாறு, என் கடமையை உணர்ந்​து, தின​மும் அறி​வால​யத்​துக்கு வரத் தொடங்கினேன். சோதனை​கள் நமக்​கென்ன புதி​தா? அந்த நெருப்​பாறுகளை நீந்​திக் கடப்​போம் வா என்று கம்​பீர​மாய் எழுந்து நிற்​கும் கற்​கோட்​டை​யான அறி​வால​யத்​தின் வாயில் தின​மும் வரவேற்​கிறது.

உள்ளே நுழைந்​ததும், ‘ஸ்​டா​லின் எனும் உன்னை இயக்​கு​வது நாங்​கள்​தான். நீ இயங்​கு​வது எங்​களுக்​காகத்​தான். நம் பயணத்​தின் வேகம் கூட வேண்​டும். அதற்​குப் புதிய பாதை​யில் நாம் பயணிக்க வேண்​டும்’ என விழிகளின் வழியே அன்​புக் கட்​டளை​யிட்டு தொண்​டர்​கள் பலர் வரவேற்​கின்​றனர்.

தின​மும் நூற்​றுக்​கணக்கானோர் என்​னைக் காண வரு​கின்​றனர். அவர்​களிடம் பேசி, அவர்கள் எண்​ணங்​களை அறிந்​து​வரு​கிறேன். அவர்​கள் என்​னிடம் சொல்வதெல்​லாம், ‘நாங்​கள் இருக்​கிறோம். நாம் மீண்​டும் வரு​வோம்’ என்​பது​தான். இந்​தச் சொற்​கள் எதிரி​களை ஒருசேர வீழ்த்​தும் வலிமையை கொடுக்​கின்றன.

ஒருசில இயக்​கங்​களால் ஒரு தோல்​வியைக் கூட தாக்​குப்​பிடிக்க முடிய​வில்​லை. ஆனால் நாம், கொள்கை உறவால் பிணைக்​கப்​பட்​டு, ஒரு குடும்​பம் போல் வேரூன்றி வளர்ந்து நிற்​கிறோம். அப்​படிப்​பட்ட நம் இயக்​கம் அடுத்த நூறாண்​டு​களுக்​குப் பயணிக்க வேண்​டிய திசையைத் தீர்​மானிக்க வேண்​டியதும், உங்​கள் உணர்​வு​களை உள்​வாங்கி அதில் புதிய பாதையை அமைக்க வேண்​டியதும் எனது கடமை.அதற்​காக குழுக்​கள் அமைக்​கப்​பட்டு தமிழகம் முழு​வதும் கருத்​துகள் கேட்​டறியப்​பட்​டன.

உங்​கள் எண்​ணங்​களின்​படி கட்​சி​யின் மறுசீரமைப்​புக்​காக இளமை​யும் அனுபவ​மும் கலந்த மறுசீரமைப்பு ஆலோ​சனைக் குழு​வை​யும் அமைத்​திருக்​கிறேன். திமுகவை போல் அமைப்​பு ரீ​தி​யாக பலம் கொண்ட வேறு கட்சிகிடை​யாது என்​பதை உணர்த்​தும் வித​மாக மீண்​டெழும்​போது மலை​யென நிற்க வேண்​டும்.

அடுத்த ஒரு நூற்​றாண்​டுக்​கான நமது வரலாற்​றை​யும் தமிழகத்​தின் புது வரலாற்​றை​யும் நாம் ஒருசேர எழுத வேண்​டும். இந்​நிலை​யில்​தான் தற்​போது வெளி​நாட்டு பயணம் மேற்​கொண்​டுள்​ளேன். இரு​வாரங்​கள் அயல​கத்​தில் இருந்​தா​லும், அறி​வால​யத்​தில்​தான் என் மனம் இருக்​கும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

“அடுத்த ஒரு நூற்றாண்டுக்கான தமிழகத்தின் புதிய வரலாற்றை எழுதுவோம்” - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு நோட்டீஸ்: சினிமா, ஓடிடி பைரசிக்கு முற்றுப்புள்ளி வைக்க உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in