மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக நிதி ஒதுக்கீடு ஆண்டுதோறும் உயர்த்தப்படுகிறது: முதல்வர் ஸ்டாலின் தகவல்

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக நிதி ஒதுக்கீடு ஆண்டுதோறும் உயர்த்தப்படுகிறது: முதல்வர் ஸ்டாலின் தகவல்

Published on

சென்னை: உலக மாற்றுத் திறனாளிகள் தினத்​தையொட்டி, சென்னையில் நடை​பெற்ற உள்​ளாட்சி அமைப்​பு​களில் மாற்​றுத் திற​னாளி​களுக்கு அதி​காரமளித்​தல் அறி​முக விழா​வில், மாற்​றுத் திற​னாளி​களுக்கு நலத்​திட்ட உதவி​கள், மாற்​றுத் திற​னாளி​களின் நல்​வாழ்​விற்​காக சிறந்த முறை​யில் சேவை புரிந்​தவர்​களுக்கு விருதுகளை​யும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று வழங்​கி​னார்.

நிகழ்ச்​சி​யில், முதல்​வர் பேசி​ய​தாவது: ​மாற்​றுத் திற​னாளி​களுக்கு அரசுப் பணி​களில் உகந்த பணி​யிடங்​களில் 4 சதவீத இட ஒதுக்​கீடு வழங்​கு​வதுடன், தனி​யார் துறை​களி​லும் பணி​யமர்த்த வேலை​வாய்ப்பு முகாம்​கள் நடத்தப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகள் நலனுக்​காக நிதி ஒதுக்​கீடு ஆண்​டு​தோறும் உயர்த்​தப்​பட்டு வரு​கிறது. பராமரிப்பு உதவித் தொகை வழங்​கும் திட்​டத்​தின் கீழ், 2.11 லட்​சம் பயனாளி​களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்​கப்​படு​கிறது. மாற்​றுத் திற​னாளி​களுக்கு முன்​னுரிமை அடிப்​படை​யில், வீட்​டுமனைப் பட்​டாக்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் பேசி​னார்.

நிகழ்ச்​சி​யில், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், அமைச்​சர்​கள் கே.என். நேரு, கீதாஜீவன், ஆர்​.எஸ்​.​ராஜகண்​ணப்​பன், மா.சுப்​பிரமணி​யன், டி.ஆர்​.பி.​ராஜா, மேயர் பிரி​யா, தலை​மைச்​செயலர்​ நா. முரு​கானந்​தம்​ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக நிதி ஒதுக்கீடு ஆண்டுதோறும் உயர்த்தப்படுகிறது: முதல்வர் ஸ்டாலின் தகவல்
முழு கொள்ளளவை எட்டும் நிலையில் பூண்டி ஏரி: புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் அதிகரிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in