கொளத்தூரில் தவெக வேட்பாளர் வெற்றிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலின் வழக்கு

கொளத்தூரில் தவெக வேட்பாளர் வெற்றிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலின் வழக்கு
Updated on
1 min read

சென்னை: கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்துள்ள வழக்கில், நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையத்தின் அனுமதி கேட்கப்பட்டது. அனுமதி பெற்றவுடன் அதன் அடிப்படையில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தலைமையிலான வழக்கறிஞர்கள் சிந்தாதிரிப்பேட்டையில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

குறிப்பாக வாக்குப் பதிவு மையங்களான 1, 17,28 ,32 ,75 ,78, 79 ,84 ,87 ,112 ,122 157 ,170 உள்ளிட்ட வாக்குச் சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த விவி பாட், வாக்குப் பதிவு இயந்திரம், கண்ட்ரோல் யூனிட் ஆகியவையும் ஆய்வு செய்யப்பட்டன.

அப்போது பெல் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்ட பொறியாளர் உடன் இருந்தார். நூறு சதவீத விவி பாட் மற்றும் வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது .

இதில் ஆறு வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை ஒப்பிட்டுப் பார்த்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் பிரதிநிதி சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதினார்.

எனவே, தேர்தல் இயந்திரம் தொடர்பாக புகார் செய்வது தொடர்பான வெளிப்படையான ஒரு நடைமுறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். அதுபோலவே, பல வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக பல வாக்குப்பதிவு இயந்திரங்களில் மென்பொருள் கோளாறு ஏற்பட்டது.

தொழில்நுட்பக் கோளாறுகளை சுட்டிக்காட்டிய பின்பும், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படிதான் சோதனை மற்றும் சரிபார்த்தல் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். எனவே பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவி பாட்-களை சரி பார்க்க வேண்டும்.

மேலும், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும். நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்,” என்று மு.க.ஸ்டாலின் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

கொளத்தூரில் தவெக வேட்பாளர் வெற்றிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலின் வழக்கு
“திருப்புகழ் கமிட்டி அறிக்கையை பேரவையில் சமர்ப்பிக்காதது ஏன்?” - கே.என்.நேரு விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in