மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் ஸ்டாலின், பழனிசாமி பிரச்சார தேதிகள் அறிவிப்பு

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் ஸ்டாலின், பழனிசாமி பிரச்சார தேதிகள் அறிவிப்பு
Updated on
1 min read

தாராபுரம்: ​தா​ராபுரம், மது​ராந்​தகம் தொகு​தி​களில் திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின், அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி ஆகியோர் வாக்​குசேகரிக்க உள்​ளனர்.

மது​ராந்​தகம், தாராபுரத்தில் தங்களது கட்சி வேட்​பாளர்​களை ஆதரித்து அந்தந்த கட்சிகளின் தலை​வர்​கள் பிரச்​சா​ரம் செய்யவுள்ளனர்.இதன்​படி தாராபுரம் திமுக வேட்​பாளர் சுகன்​யாவை ஆதரித்​து, அக்​கட்​சி​யின் தலை​வர் மு.க.ஸ்​டா​லின் வரும் அக். 2-ம் தேதி தாராபுரத்​தில் பிரச்​சா​ரம் செய்ய உள்ளார்.

மேலும் மது​ராந்​தகம் தொகு​தி​யில் ஐ.பரந்​தாமனை ஆதரித்து வரும் அக்​. 3-ம் தேதி மு.க.ஸ்​டா​லின் பிரச்​சா​ரம் செய்​ய​வுள்​ளார். இதற்காக பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதே​போல் தாராபுரம் அதி​முக வேட்​பாளர் பானு​ம​தியை ஆதரித்து கட்​சி​யின் பொதுச்செய​லா​ளர் பழனி​சாமி 3 நாட்கள் பிரச்​சா​ரம் மேற்​கொள்​கிறார். கன்​னி​வாடி, மூலனூர், கொளத்​துப்​பாளை​யம், உப்​புத்​துறை​பாளை​யம் ஆகிய இடங்​களில் செப்​.27-ம் தேதி​யும் குண்​டடம், மானூர்​பாளை​யம், உப்​பாறு அணை, பொன்​னாபுரம் பகு​தி​களில் 28-ம் தேதி​யும் அக்​.2-ம் தேதி தளவாய்​பட்​ட​ணம், தாராபுரம் நகரிலும் பிரச்​சா​ரம் செய்​கிறார்.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் ஸ்டாலின், பழனிசாமி பிரச்சார தேதிகள் அறிவிப்பு
‘முதல்வர் விஜய் ஒப்புதலின்றி பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக திட்டத்துக்கு உத்தரவா?’ - கனிமொழி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in