பசுமைப் போராளியும், மருத்துவருமான சத்தியசுந்தரி மறைவு: ஸ்டாலின் இரங்கல்

பசுமைப் போராளியும், மருத்துவருமான சத்தியசுந்தரி மறைவு: ஸ்டாலின் இரங்கல்
Updated on
1 min read

சென்னை: பசுமைப் போராளியும், மருத்துவருமான சத்தியசுந்தரியின் மறைவையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியது:

பசுமைப் போராளியும், சிறந்த மகப்பேறு மருத்துவருமான சத்தியசுந்தரியின் மறைவுச் செய்தியறிந்து மிகவும் துயருற்றேன். இயற்கையின் மடியில் மீளாத் துயில் கொள்ளும் அந்த இயற்கைப் பாதுகாவலரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1980-களில் பவானி ஆற்றைப் பாழாக்கிய விஸ்கோஸ் ஆலைக்கு எதிராக, எவ்வித மிரட்டல்களுக்கும் அஞ்சாமல் மக்களைத் திரட்டி அவர் நடத்திய சட்டப் போராட்டமும், களப் போராட்டமும் இன்றும் மக்களால் நினைவுகூரப்படுகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த சத்தியசுந்தரி அம்மா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் - உறவினர்கள் - சூழலியல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பசுமைப் போராளியும், மருத்துவருமான சத்தியசுந்தரி மறைவு: ஸ்டாலின் இரங்கல்
பனாமாவை வீழ்த்தி இங்கிலாந்தும், போர்ச்சுகலுடன் டிரா செய்து கொலம்பியாவும் முதலிடம் | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in