“திமுக செய்ததில் 5 சதவீதமாவது அதிமுக ஆட்சியில் நடந்ததா?” - ஸ்டாலின் சவால்

“திமுக செய்ததில் 5 சதவீதமாவது அதிமுக ஆட்சியில் நடந்ததா?” - ஸ்டாலின் சவால்
Updated on
2 min read

நெஞ்சை நிமிர்த்தி காலரை உயர்த்தி தமிழகம் முன்னேறுகிறது. இதில் 5 சதவீதமாவது அதிமுக ஆட்சியில் நடந்ததா... அவர்களால் அப்படிச் சொல்ல முடியுமா? இது என்னுடைய ஓபன் சேலஞ்ச். தைரியம் இருந்தால் அவர்கள் சொல்லட்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

கள்​ளக்​குறிச்​சி​யில் நடை​பெற்ற புதிய ஆட்​சி​யர் அலு​வலக கட்​டிடத் திறப்பு மற்​றும் அரசு நலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் விழா​வில் முதல்​வர் ஸ்டா​லின் நேற்று பங்​கேற்​றார். அப்​போது அவர் பேசி​ய​தாவது:

கள்​ளக்​குறிச்சி மாவட்​டம் உள்​ளிட்ட தமி​ழ​கம் முழு​வதும் அதிக எண்​ணிக்​கையி​லான பட்​டாக்​களை வழங்​கி, நிலமற்ற ஏழை எளிய மக்​களுக்கு நிலம் என்ற அதி​காரத்தை வழங்​கி​யிருக்​கி​றோம். அடுத்து ஏ.ஐ தொழில்​நுட்​பத்​துடன் கூடிய லேப்​டாப்​களை பள்ளி மாண​வர்​களுக்கு வழங்​க​வுள்​ளோம். இந்​தி​யா​விலேயே தமிழ்​நாடு தனிக்​காட்டு ராஜா. இங்​குள்ள தொழில் நிறு​வனங்​களில் தான், இந்​தி​யா​விலேயே அதிக எண்​ணிக்​கை​யில் மகளிர் பணி​புரி​கின்​ற​னர்.

11.19 சதவீத பொருளா​தார வளர்ச்​சியை அடைந்​துள்​ளோம். மின்​னணு பொருள் ஏற்​றும​தி, ஆட்​டோமொபைல் துறை, ஸ்டார்ட் அப் தரவரிசை ஆகிய​வற்​றில் தமிழ்​நாடு தான் ‘நம்​பர் 1.’ இதையெல்​லாம் சொல்​லச் சொல்ல எனக்கு மூச்சு வாங்​கு​கிறது. இது​எல்​லாமே நிரூபிக்​கப்​பட்ட உண்​மை​கள். மத்​திய அரசின் தர வரிசை பட்​டியலிலும், உலக அளவி​லான விருதுகளை பெறு​வ​தி​லும் கூட நம்​பர் ஒன் தமிழ்​நாடு தான். இதில் 5 சதவீத​மாவது அதி​முக ஆட்​சிக் காலத்​தில் நடை​பெற்​ற​தா... உங்​களால் சொல்ல முடி​யு​மா? நான் வெளிப்​படை​யாகவே சவால் விடு​கிறேன்.

10 ஆண்​டு​கால அதி​முக ஆட்​சி​யில் பாழாய்ப் போன தமிழ்​நாடு, திரா​விட மாடல் ஆட்​சி​யில் 4 ஆண்​டு​களில் துள்​ளிக் குதித்து எழுந்​துள்​ளது. இனி எப்​போதும் ஏறு​முகம் தான். மத்​திய அரசு வஞ்​சகத்​துடன் தமிழ்​நாட்​டுக்கு முதலீட்​டாளர்​கள் வரவேகூ​டாது என ‘ஸ்​பீடு பிரேக்’ போடு​வதை​யும் தாண்டி சாதனை படைத்து வரு​கி​றோம். திரா​விட மாடல் ஆட்​சி​யின் சாதனைக்கு 2026 தேர்​தலில் மக்​கள் தீர்ப்பு அளிப்​பார்​கள்.

பாஜக ஆளும் மாநிலங்​களில் வறுமை, மத வன்முறை, வேலைவாய்ப்​பின்மை இதுதான் இருக்​கிறது. இதுதான் பாஜக மாடல் அரசு. கிறிஸ்​துமஸ் அன்று கூட மாற்றுத்​திறனாளி கிறிஸ்தவரை தாக்கி மதவெறியை தூண்டுகிற மோசமான நிலையை பாஜக உருவாக்கி வைத்திருக்​கிறது. இந்த மாடலைத் தான் தமிழகத்தில் கொண்டு வரப் பார்க்​கி​றார்கள். ஆனால், தமிழ்​நாட்டு மக்கள் ரொம்ப உஷார். திருப்​பரங்​குன்றம் மலையில் இருக்கிற தர்காவை முருக பக்தர்கள் வணங்கு​கி​றார்கள். மதுரை சித்திரைத் திருவிழாவுக்கு வரும் இந்து சகோதரர்​களுக்கு பள்ளி​வாசல்​களில் இருந்து இஸ்லாமிய சகோதரர்கள் ரோஸ் மில்க் கொடுக்​கி​றார்கள்.

தை முதல்நாளில் தேவாலயங்களில் பொங்கல் வைத்து படைக்கிறார்கள். கிறிஸ்துமஸ், ரம்ஜான் வந்தால், ‘பிரியாணி, கேக் எங்கே?’ என்று உரிமையாகக் கேட்கிறார்கள. ‘எம்மதமும் சம்மதம்’ என்ற தமிழக மக்களின் ஒற்றுமை, மத நல்லிணக்கம், மதவாத சக்தியான பாஜக-வின் கண்களை உறுத்துகிறது. ஆனால், உண்மையான ஒற்றுமையுடன் வாழும் தமிழக மக்களிடம் எப்போதும் மதவெறியை தூண்ட முடியாது.

இந்த ஸ்டாலின் இருக்கும் வரை, திராவிட மாடல் அரசு இருக்கும் வரை பாஜக-வின் மதவாத ஆட்டத்துக்கு தமிழ்நாட்டில் இடமில்லை. தமிழ்நாட்டு மக்கள் வாக்குகளால் உங்களை விரட்டியடிப்பார்கள். நீங்கள் என்ன செய்தாலும் உங்கள் பாச்சா பலிக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

“திமுக செய்ததில் 5 சதவீதமாவது அதிமுக ஆட்சியில் நடந்ததா?” - ஸ்டாலின் சவால்
“தேர்தலில் சதித் திட்டத்தை அரங்கேற்ற திமுக முயற்சி!” - நாராயணன் திருப்பதி திகில் குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in