“தேர்தலில் சதித் திட்டத்தை அரங்கேற்ற திமுக முயற்சி!” - நாராயணன் திருப்பதி திகில் குற்றச்சாட்டு

Narayanan Thirupathy

நாராயணன் திருப்பதி

Updated on
1 min read

தமி​ழ​கத்​தில் திமுக மதவாத சிந்​தனையை தூண்​டி​விட்​டு, மதங்​களுக்கு இடையே குழப்​பத்தை ஏற்​படுத்த முயற்சிப்பதாக மாநில பாஜக தலை​மைச் செய்​தித் தொடர்​பாளர் நாராயணன் திருப்​பதி தெரி​வித்​தார்.

இது தொடர்​பாக அவர் நேற்று ராம​நாத​புரத்​தில் செய்​தி​யாளர் சந்​திப்​பில் கூறிய​தாவது: அண்​மைக் கால​மாக முதலமைச்​சர் மு.க. ஸ்டா​லின் மதவாதப் போக்​குடன் நடந்து கொள்​கி​றார். திமுக ஒரு மதவாதக் கட்​சி​யாக மாறிக் கொண்​டிருக்​கிறது. தமி​ழ​கத்​தில் மதவாத சிந்​தனையை தூண்​டி​விட்​டு, மதங்​களுக்கு இடையே குழப்​பத்தை ஏற்​படுத்தி ஒரு மிகப் பெரிய சதித்​திட்​டத்தை தமி​ழ​கத்​தில் வரு​கின்ற தேர்​தலிலே அரங்​கேற்​று​வதற்​கான முயற்​சியை திமுக-​வும் அதனுடைய கூட்​டணி கட்​சிகளும் செய்​கி​றார்​களோ என்​கின்ற ஐயம் நம்​மிடத்​திலே இருக்​கிறது.

வேறு சில மாநிலங்​களில் சட்​டம் - ஒழுங்கு பிரச்​சினை​களை காரணம் காட்​டு​கின்ற முதலமைச்​சர், தமிழ்​நாட்​டில் சட்​டம் - ஒழுங்கு சீர்​கெட்​டுப் போய் இருக்​கிறது. பெண்​களின் பாது​காப்பு கேள்விக்​குறி​யாகி வரு​கிறது. பள்​ளிக்​கூடங்​களில் பாலியல் வன்​முறை​கள் அதி​கரித்து வரு​கின்​றது. பாது​காப்​பற்ற மாநில​மாக தமி​ழ​கம் விளங்​கிக் கொண்​டிருக்​கின்​றது. இதை எல்​லாம் கண்டு கொள்​ள​வில்​லை.

இதற்​கெல்​லாம் 2026 தேர்​தலில் தமி​ழ​கம் தக்க பதிலடி தரும். அதி​முக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி மிகப்​பெரிய வெற்றி பெறப் போகிறது. முதலமைச்​சரும் காங்​கிரஸ் கட்​சி​யினரும், நூறு நாள் வேலை திட்​டத்​தில் மகாத்மா காந்​தி​யடி​களின் பெயரை எடுத்து விட்​டார்​கள் என்று பொங்​கிக் கொண்​டிருக்​கி​றார்​கள். ஆனால், இந்​தி​யா​விலேயே மகாத்மா காந்​தியை பற்றி மிக கொச்​சை​யாக பேசி​ய​வர்​கள் திரா​விடக் கட்​சி​யைச் சார்ந்​தவர்​கள் தான். முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அவர்​களுக்கு சவால் விடு​கின்​றோம். தமிழ்​நாட்​டில் கருணாநிதி, ஈ.வெ.ரா பெயர்​களில் உள்ள திட்​டங்​களுக்கு எல்​லாம் மகாத்மா காந்​தி​யின் பெயரை வைக்​கத் தயா​ரா? இவ்​வாறு அவர் தெரிவித்​தார்.

Narayanan Thirupathy
வேட்பாளர் தேர்வில் பியூஷ் கோயல் மும்முரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in