நெல்லை பாளையங்கோட்டையில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் ரூ.694 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர். | படம்: மு.லெட்சுமி அருண் |

நெல்லை பாளையங்கோட்டையில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் ரூ.694 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர். | படம்: மு.லெட்சுமி அருண் |

100 நாள் வேலை புதிய சட்டத்தை திரும்பப் பெற வைப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

Published on

திருநெல்வேலி: நூறு நாள் வேலைத் திட்​டம் தொடர்​பாக மத்​திய அரசு கொண்டு வந்​துள்ள புதிய சட்​டத்​தை, மக்​கள் சக்​தி​யுடன் திரும்​பப் பெற வைப்​போம் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கூறி​னார். நெல்லை பாளை​யங்​கோட்டை அரசு மருத்​து​வக் கல்​லூரி மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற அரசு விழா​வில் ரூ.694 கோடி மதிப்​பிலான 33 முடிவுற்ற திட்​டப் பணி​களை திறந்து வைத்த முதல்​வர் ஸ்டா​லின், 11 புதிய திட்​டப் பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார்.

தொடர்ந்​து, 45,477 பயனாளி​களுக்கு நலத்​திட்ட உதவி​கள் வழங்கி அவர் பேசி​ய​தாவது: கீழடி தொடங்கி பல வரலாற்று இடங்​களில் மேற்​கொள்​ளும் அகழாய்​வு​களுக்​கு, மத்​திய பாஜக அரசு பல்​வேறு தடைகளை ஏற்​படுத்​திக் கொண்டே இருக்​கிறது. தமிழர்​களின் வரலாற்​றுத் தொன்​மையை நிரூபிக்​கும் ஆய்​வு​கள் நடை​பெறக் கூடாது, மீறி நடந்​தா​லும், முடிவு​கள் வெளியே வரக் கூடாது என்​பது​தான் அவர்​களது எண்​ணம்.

இல்​லாத சரஸ்​வதி நதி நாகரி​கத்​தைத் தேடி அலைபவர்​களுக்​கு, நமது ஆய்​வு​கள் தெரிவ​தில்​லை. நம் வரலாற்றை விட்​டுக்​கொடுக்க முடி​யாது. ஈரா​யிரம் ஆண்​டு​கால சண்​டை​யில் நாம் தோல்வி அடைந்​து​விட மாட்​டோம். அதற்​காகத்​தான் அருங்​காட்​சி​யகங்​களை அமைத்து வரு​கிறோம்.

பிரதமருக்கு அழைப்பு: 2021 மத்​திய பட்​ஜெட்​டில் ஆதிச்​சநல்​லூர் அருங்​காட்​சி​யகம் அமைப்​பது தொடர்​பான அறி​விப்பு வெளி​யானது. ஆனால், இது​வரை பணி​களைத் தொடங்​க​வில்​லை. ஆனால், திமுக ஆட்​சிப் பொறுப்​புக்கு வந்த பிறகு சிவகளை உள்​ளிட்ட இடங்​களில் அகழாய்வு மேற்​கொண்​டு, தற்​போது உலகமே திரும்​பிப் பார்க்​கக்​கூடிய அளவுக்கு பொருநை அருங்​காட்​சி​யகத்தை உரு​வாக்கி இருக்​கிறோம்.

தமிழகத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள கீழடி, பொருநை அருங்​காட்​சி​யகங்​களை பிரதமர் மோடி​யும், நிதி​யமைச்​சர் நிர்​மலா சீத்​தா​ராமனும் பார்​வை​யிட வேண்​டும் என நான் அழைப்பு விடுக்​கிறேன். நேரில் இவற்​றைப் பார்த்​தால்​தான் தமிழர் நாகரி​கத்​தின் தொன்மை புரி​யும். மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்​டத்தை பாஜக அரசு திட்​ட​மிட்டு முடக்​கி​யிருக்​கிறது. மகாத்மா பெயரையே நீக்​கி, பெரும்​பாலான இந்​திய மக்​களுக்​குப் புரி​யாத இந்​திப் பெயரை வைத்​திருக்​கிறார்​கள். மதச்​சார்​பின்​மை, ஒற்​றுமை என்ற சொற்​கள் பாஜக​வுக்கு பிடிக்​காது.

அதனாலேயே, அதை யெல்​லாம் வாழ்​நாளெல்​லாம் வலி​யுறுத்​திய காந்​தி​யை​யும் அவர்​களுக்கு பிடிக்​காது. நூறு நாள் வேலைத் திட்​டத்தை பல்​வேறு வழிகளில் முடக்​கப் பார்த்து தற்​போது மொத்​த​மாக மூடு​விழா நடத்​தி​விட்​டார்​கள். அது​மட்​டுமல்ல, மாநில அரசு 40 சதவீத நிதி தர வேண்​டு​மாம். ஏழைகளுக்​கும், பாஜக அரசுக்​கும் எந்த சம்​பந்​த​மும் இல்லை என்​பது தெளி​வாகி​விட்​டது.

இதன் விளைவு​கள் மோச​மாக இருக்​கும். பல்​வேறு தரப்​பினரும் இதை எதிர்த்​துக் குரல் கொடுத்​தா​லும், அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி இதைப் பற்றி மூச்​சுக்​கூட விடா​மல் இருக்​கிறார். மக்​கள் சக்​தி​யின் துணை​யோடு இந்த சட்​டத்தை திரும்​பப் பெற வைப்​போம். ஜிஎஸ்​டி, அடாவடி ஆளுநர், மெட்ரோ நிராகரிப்பு என பாஜக அரசு எத்​தனை நெருக்​கடிகளைக் கொடுத்​தா​லும், அனைத்து வகை​யிலும் தமிழகத்தை முன்​னேறிய மாநில​மாக உயர்த்​தி​யுள்​ளோம்.

எனவே, அடுத்து அமையப் போவதும் திமுக ஆட்​சி​தான். திரா​விட மாடல் அரசு2.0 இன்​னும் பல மகத்​தான திட்​டங்​களைக் கொண்​டு​வரும். இவ்​வாறு முதல்​வர் பேசி​னார். விழா​வில், சட்​டப்​பேர​வைத் தலை​வர் மு.அப்​பாவு, அமைச்​சர்​கள் கே.என்​.நேரு, எ.வ.வேலு, சாத்​தூர் ராமச்​சந்​திரன், தங்​கம் தென்​னரசு, கீதாஜீவன், ராஜகண்​ணப்​பன், மா.சுப்​பிரமணி​யன், மனோ தங்​க​ராஜ், எம்​.பி.க்​கள் கனி​மொழி, ராபர்ட் புரூஸ், ராணி கு​மார், எம்​எல்​ஏக்​கள் அப்​துல் வகாப், ரூபி மனோகரன், மாவட்ட ஆட்​சி​யர் சுகு​மார் கலந்​துகொண்​டனர்.

<div class="paragraphs"><p>நெல்லை பாளையங்கோட்டையில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் ரூ.694 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர். | படம்: மு.லெட்சுமி அருண் |</p></div>
டிச. 26 முதல் ரயில் கட்டணம் உயர்கிறது: புறநகர் ரயில், சீசன் கட்டணத்தில் மாற்றம் இல்லை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in