பாபநாசம் அருகே மணல் கடத்தலை தடுக்கச் சென்ற எஸ்எஸ்ஐ மீது டிராக்டர் மோதல்

பாபநாசம் அருகே மணல் கடத்தலை தடுக்கச் சென்ற எஸ்எஸ்ஐ மீது டிராக்டர் மோதல்
Updated on: 
1 min read

கும்பகோணம்: பாபநாசம் வட்டம் கோடுகிழி அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவலர் டிராக்டர் ஏறியதில் படுகாயமடைந்தார்.

பாபநாசம் வட்டம் கோடுகிழியில் மணல் அள்ளுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மெலட்டூர் காவல் நிலைய எஸ்எஸ்ஐ முத்துவேல் மற்றும் தலைமைக் காவலர் ராமன் ஆகியோர் உடனடியாக இருசக்கர வாகனத்தில் ரோந்துப் பணியில் இன்று அதிகாலை ஈடுபட்டிருந்தனர்.

கோடுகிழி பாலம் அருகே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்த போது சாலையில் எதிரே வந்த டிராக்டரை நிறுத்த போலீஸார் முயற்சி செய்துள்ளனர். போலீஸாரை கண்ட ஓட்டுநர் டிராக்டரை நிறுத்தாமல் அதிலிருந்து குதித்து தப்பி ஓடியுள்ளார்.

மேலும், ஓட்டுநர் இன்றி வந்த டிராக்டரை நிறுத்த முயற்சி செய்த எஸ்எஸ்ஐ முத்துவேல் மீது மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அருகில் இருந்த தலைமைக் காவலர் ராமன் உடனடியாக மெலட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் எஸ்எஸ்ஐ முத்துவேலை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனிடையே, மணல் கடத்தல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள மெலட்டூர் போலீஸார் தப்பி ஓடிய டிராக்டர் ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பாபநாசம் அருகே மணல் கடத்தலை தடுக்கச் சென்ற எஸ்எஸ்ஐ மீது டிராக்டர் மோதல்
தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையா தாக்கல் செய்த மனு தள்ளுபடி: ஐகோர்ட்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in