தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையா தாக்கல் செய்த மனு தள்ளுபடி: ஐகோர்ட்

இசக்கி சுப்பையா

இசக்கி சுப்பையா

Updated on: 
1 min read

சென்னை: தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அம்பாசமுத்திரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இசக்கி சுப்பையா தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வி.பி.துரையை விட 10,245 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பின்னர், பதவியை ராஜினாமா செய்து, தவெகவில் இணைந்தார்.

இதனிடையே, இசக்கி சுப்பையாவின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி வாக்காளர் காந்திமதிநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் பதிலளிக்கும்படி இசக்கி சுப்பையாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், தனக்கு எதிரான இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி இசக்கி சுப்பையா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, வாக்காளர் காந்திமதிநாதனின் மனுவை நிராகரிக்க மறுத்து, இசக்கி சுப்பையாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதேபோல, தேர்தல் வழக்கு தொடர்பான மனுவில், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள சில பத்திகளை நீக்க வேண்டும் என்ற இசக்கி சுப்பையாவின் கோரிக்கையை ஏற்று, அந்த பத்திகளை நீக்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அம்பாசமுத்திரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்ற பொதுநல வழக்கு விசாரணையில் இருந்துவரும் சூழலில், தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று இசக்கி சுப்பையா தாக்கல் செய்துள்ள மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

<div class="paragraphs"><p>இசக்கி சுப்பையா</p></div>
“ரத்த தானம் செய்ய முன்வரும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம்”- முதல்வர் விஜய்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in