ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சி தொட்டி திறந்து நெசவாளர்கள் போராட்டம்

அரசு அறிவித்த புதிய ரக சேலையை நெசவு செய்ய எதிர்ப்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்ட நெசவாளர்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்ட நெசவாளர்கள்.

Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்​லிபுத்​தூரில் உள்ள 6 நெச​வாளர் கூட்​டுறவு உற்​பத்தி மற்​றும் விற்​பனை சங்​கங்​களின் கீழ் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பெடல் தறிகள் உள்​ளன. இங்கு தமிழக அரசு பொங்​கல் பண்​டிகைக்கு வழங்​கும் சேலை, பள்ளி மாணவர்​களின் சீருடைக்​கான காடா துணி நெசவு செய்​யப்​பட்டு வரு​கிறது. இதன் மூலம் 5 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட நெச​வாளர்​கள் வேலை​வாய்ப்பு பெறுகின்​றனர்.

கடந்த 2 மாதங்​களாக கூட்​டுறவு சங்​கங்​கள் மூலம் நெச​வாளர்​களுக்கு நூல் வழங்​கவில்​லை. இந்த தறிகளில் கூட்​டுறவு சங்​கங்​களுக்​கான ரகங்​கள் தவிர வேறுசேலை மற்​றும் துணி​கள் நெசவு செய்​யக்​கூ​டாது என்ற விதி​முறை உள்​ள​தால், 5 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட நெச​வாளர்​கள் 2 மாதங்​களாக வேலை​யின்றி தவித்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில் பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள. புதிய ரக சேலைக்கு ஏற்ப தறிகளில் மாற்​றம் செய்ய ஒரு மாதத்​துக்கு மேல் கால அவகாசம் தேவைப்​படு​கிறது. மேலும், தறிக்கு ரூ.10 ஆயிரம் வரை கூடு​தல் செலவு ஆகும்.

எனவே, புதிய ரக சேலைக்கு நெச​வாளர்​கள் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றனர்.இதனால், ஸ்ரீவில்​லிபுத்​தூர் மாயாண்​டிபட்டி தெரு விநாயகர் கோயில் முன் 6 நெச​வாளர் கூட்​டுறவு உற்​பத்தி மற்​றும் விற்​பனை​யாளர் சங்​கங்​களைச் சேர்ந்த 1,000-க்​கும் மேற்​பட்ட நெச​வாளர்​கள் கஞ்​சித் தொட்டி திறந்து நேற்று காலை போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அதைத்தொடர்ந்து கைத்​தறித்துறை உதவி இயக்​குநர் வெங்​கடேசலு, டிஎஸ்பி பாலசுந்​தரம் ஆகியோர் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். புதிய ரகத்தை ரத்து செய்​து​ விட்​டு, பழைய ரக சேலை உற்​பத்​திக்கு உடனடி​யாக நூல் வழங்க வேண்​டும். 2 மாத கால வேலை இழப்​புக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்​டும். சம்பள உயர்வு வழங்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகள் அடங்​கிய மனுவை நெச​வாளர்​கள் அளித்​தனர்.

வேலை இழப்​புக்கு நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்​துரை செய்​வ​தாக​வும், முன்​பண​மாக தறிக்கு ரூ.1,000 வழங்​கு​வ​தாக​வும், ஒரு வாரத்​தில் பிரச்​சினைக்கு தீர்வு காண்​ப​தாக​வும்கைத்​தறித் துறை உதவி இயக்​குநர் உறுதி அளித்​தார். இதையடுத்து நெச​வாளர்​கள் போராட்​டத்தை கைவிட்டு கலைந்து சென்​றனர். முன்​ன​தாக வில்​லிபுத்​தூர் நகர தவெக செய​லா​ளர் ராஜ​பாண்டி நெசவாளர்களுடன் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். அப்போது, ‘இது நெச​வாளர்​கள் நடத்​தும் போராட்​டம். எனவே, அரசி​யல் கட்​சி​யினர் பங்கேற்க வேண்டாம்’ என நெசவாளர்கள் தெரிவித்தனர்.

<div class="paragraphs"><p>ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்ட நெசவாளர்கள்.</p></div>
சீனாவில் ஷூ தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 28 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in