தமிழகம், புதுவை மீனவர்கள் 25 பேரை விடுவித்தது இலங்கை

தமிழகம், புதுவை மீனவர்கள் 25 பேரை விடுவித்தது இலங்கை
Updated on
1 min read

ராமேசுவரம்: தமிழகம், புதுவை மீனவர்கள் 25 பேரை இலங்கை நீதி​மன்​றம் நிபந்தனை​யுடன் விடு​தலை செய்தது. காரைக்​கால் மாவட்​டம் கிளிஞ்​சல்​மேடு, காசாக் குடிமேடு, மயி​லாடு துறை, நாகை அக்கரைப்​பேட்​டை, சாமந்​தான் பேட்டை பகு​திகளைச் சேர்ந்த 14 மீனவர்​கள் ஒரு படகிலும் காரைக்கால், நாகை நம்பியார் நகர், சீர்​காழி திரு​முல்லைவாசல் பகு​தி​களைச் சேர்ந்த 11 மீனவர்​கள் மற்​றொரு படகிலும் காரைக்​கால் மீன்​பிடி துறைமுகத்​தில் இருந்து கடலுக்​குச் சென்​றனர்.

கடந்த பிப். 16 அன்று இவர்களை இலங்கை கடற்​படையினர் நெடுந்​தீவு அருகே சிறை பிடித்து நீதி​மன்​றக் காவலில் யாழ்ப்​பாணம் சிறை​யில் அடைத்​தனர்.

இந்​நிலை​யில், மீனவர்​களின் காவல் நேற்று (செவ்​வாய்​கிழமை நிறை வடைந்ததை தொடர்ந்து 25 பேரும் மல்​லாகம் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்​டனர்.

வழக்கை விசா​ரித்த நீதிபதி 25 பேரும் மீண்​டும் இலங்கை எல்​லைக்​குள் மீன்பிடித்​தால் அபராதம் மற்​றும் சிறைத் தண்​டனை அனுபவிக்க வேண்​டும் என்ற நிபந்​தனை​யுடன் விடு​தலை செய்து உத்​தர​விட்​டார்.

தமிழகம், புதுவை மீனவர்கள் 25 பேரை விடுவித்தது இலங்கை
மதுரை மத்திய தொகுதியில் 210 பிளாஸ்டிக் சேர்கள் பறிமுதல்: திமுகவினர் பதுக்கி வைத்திருந்ததாக புகார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in