

கோப்புப் படம்
ராமேசுவரம்: ராமேசுவரம் பாம்பன் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற டேவிட் என்பவரது விசைப்படகை இலங்கை கடற்படையினர் ரோந்து பணியின்போது சிறைப்பிடித்து, அப்படகிலிருந்த 12 மீனவர்களை, கடந்த பிப்.23-ம் தேதி கைது செய்தனர். அவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வெளிச்சுரா சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில்மீனவர்களின் காவல் நேற்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து, 12 பேரும் வெளிச்சுரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை, மீண்டும் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தால் அபராதம், சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.