தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் - தவெகவில் இணைய திட்டமா?

யுவராஜா
யுவராஜா
Updated on
1 min read

ஈரோடு: த​மாகா பொதுச்​செய​லா​ளர் யுவ​ராஜா, கட்​சி​யின் அனைத்து பொறுப்​பு​களில் இருந்​தும் விடு​வித்​துக் கொள்​வ​தாக​வும், அரசி​யலில் இருந்து வில​கு​வ​தாக​வும் அறி​வித்​துள்​ளார்.

ஈரோடு மாவட்​டம் திண்​டலை அடுத்​துள்ள பெரிய செங்​கோடம்​பாளை​யம் பகு​தி​யைச் சேர்ந்​தவர் யுவ​ராஜா (45). தமிழ் மாநில காங்​கிரஸ் கட்​சி​யின் பொதுச் செய​லா​ள​ராக இருந்த அவர், கடந்த 10 ஆண்​டு​களாக இளைஞர் அணி தலை​வ​ராக​வும் பொறுப்பு வகித்​துள்​ளார். 2011-ல் ஈரோடு மேற்கு தொகு​தி​யிலும், 2021-ல் கிழக்கு தொகு​தி​யிலும், 2026-ம் ஆண்டு மேற்கு தொகு​தி​யிலும் போட்​டி​யிட்டு தோல்வி அடைந்​தார்.

இந்​நிலை​யில் தமிழ் மாநில காங்​கிரஸ் கட்​சி​யில் இருந்து வில​கு​வ​தாகக்​கூறி தமாகா தலை​வர் ஜி.கே.​வாசனுக்கு யுவ​ராஜா கடிதம் அனுப்பி உள்​ளார். அக்​கடிதத்​தில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 25 ஆண்​டு​களாக என் உழைப்​பை​யும், நேரத்​தை​யும் அர்ப்​பணித்து பயணித்த அரசி​யலில் இருந்து வில​கு​வதற்​கான முடிவை எடுக்க வேண்​டிய சூழ்​நிலை ஏற்​பட்​டுள்​ளது. கட்​சி​யின் மாநில பொதுச்​செய​லா​ள​ராக பணி​யாற்றி கட்​சி​யின் வளர்ச்​சிக்​காக பங்​களிக்க வாய்ப்​பளித்​ததற்கு நன்​றியை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

மேலும் 3 முறை சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிடும் வாய்ப்பை வழங்​கியதற்கு நன்​றி. என் மீது நம்​பிக்கை வைத்த உங்​களுக்​கும், என்னை ஆதரித்த அனைத்து நிர்​வாகி​கள் மற்​றும் தொண்​டர்​களுக்​கும் என் உளமார்ந்த நன்​றியைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன். ஒரு அரசி​யல் அமைப்பை விட்டு வில​கு​வது எளி​தான முடிவு அல்ல.

குறிப்​பாக என் இளமைப் பரு​வம் முதல் என் வாழ்​வின் முக்​கிய​மான கால​கட்​டங்​களை இணைத்​துக் கொண்ட கட்​சி​யில் இருந்து வில​கு​வது எனக்கு மிகுந்த வேதனை அளிக்​கிறது. தற்​போதைய சூழ்​நிலைகளைக் கருத்​தில் கொண்​டு, அடிப்​படை உறுப்​பினர் உள்பட அனைத்து பொறுப்​பு​களில் இருந்​தும் வில​கிக் கொள்​கிறேன். இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

சமீபத்​தில் சென்​னை​யில் தவெக பொதுச்​செய​லா​ள​ரும், அமைச்​சரு​மான ஆனந்தை சந்​தித்து யுவ​ராஜா பேசி​னார். இதையடுத்து அவர், தவெக​வில் இணைய உள்​ள​தாக சமூக வலை​தளங்​களில் வேக​மாக தகவல் பரவி வரு​கிறது. இதுதொடர்​பாக யுவ​ராஜா​விடம் கேட்​ட​போது, “தற்​போது​தான் தமாகா கட்​சி​யில் இருந்து விலகி உள்​ளேன். இரண்டு தினங்​களில் செய்​தி​யாளர்​களை சந்​தித்​து, எனது அடுத்த முடிவு குறித்து தெரி​விப்​பேன்” என்​றார்​.

யுவராஜா
‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்துக்கு முதல்வர் ரூ.48 லட்சம் காசோலையை வழங்கி பாராட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in