தீபாவளி: சென்னையில் இருந்து போத்தனூர், நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on: 
1 min read

சென்னை: தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து போத்தனூர், நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நவ.8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னையில் இருந்து 2 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம்:

சென்னை சென்ட்ரலில் இருந்து நவ.6-ம் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06023) மறுநாள் காலை 9.15 மணிக்கு போத்தனூர் சென்றடையும். மறுமார்க்கமாக, போத்தனூரில் இருந்து நவ.9-ம் தேதி இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06024) மறுநாள் காலை 9.35 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

தாம்பரத்தில் இருந்து நவ.6-ம் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06153) மறுநாள் பிற்பகல் 3.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து நவ.9-ம் தேதி இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06154) மறுநாள் முற்பகல் 11.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த 2 சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு அக்.29-ம் தேதி (நாளை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
'புதுச்சேரியில் அத்தியாவசிய பொருட்கள் விலை கடும் உயர்வு’ - ரேஷன் கடைகளை திறக்க இடதுசாரிகள் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in