

கோப்புப்படம்
சென்னை: கோவையில் இருந்து சென்னைக்கு நாளையும் (டிச.7), சென்னையில் இருந்து கோவைக்கு நாளை மறுதினமும் (டிச.8) சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
கோவை ரயில் நிலையத்தில் இருந்து டிச.7 இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06024) மறுநாள் காலை 9.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து டிச.8 பகல் 12.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06023) இரவு 10.30 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்தடையும்.
இரண்டடுக்கு மற்றும் மூன்றடுக்கு குளிர்சாதன வசதியுள்ள தலா ஒரு பெட்டிகள், 19 படுக்கை வசதி பெட்டிகள், இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இந்த சிறப்பு ரயிலில் இணைக்கப்பட உள்ளன.
இதேபோல், திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06108), டிச.8-ம் தேதி காலை 11.20-க்கு சென்னை எழுப்பூர் ரயில் நிலையத்தை அடையும்.
மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து நாளை மறுநாள் பகல் 1.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06107) அடுத்த நாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்கள், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.