தாம்பரம் - தென்காசி இடையே சிறப்பு அதிவிரைவு ரயில்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: ​வி​யாழன் மற்​றும் சனிக்​கிழமை​களில் தாம்​பரம் - தென்​காசி இடையே சிறப்பு ரயில் இயக்​கப்​படுகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளி​யிட்ட அறிக்கை: கூட்ட நெரிசலை குறைக்க தாம்​பரம் - தென்​காசி இடையே வாரம் இரு​முறை வியாழன் மற்​றும் சனிக்​கிழமை​களில் அதி​விரைவு சிறப்பு ரயில் இயக்​கப்​படும். தாம்​பரத்​தில் இருந்து தென்​காசிக்கு (ரயில் எண். 06135) ஜூலை 30, ஆக. 1, 6, 8, 13, 15 ஆகிய தேதி​களில் சிறப்பு ரயில் இயக்​கப்​படும்.

தாம்​பரத்​தில் இருந்து அதி​காலை 5 மணிக்கு புறப்​படும் ரயில், மாலை 3.30 மணிக்கு தென்​காசி சென்​றடை​யும், இந்த ரயில் செங்​கல்​பட்​டு, விழுப்​புரம், திருச்​சி, திண்​டுக்​கல், மதுரை, விருதுநகர், சிவ​காசி, ராஜ​பாளை​யம், சங்​கரன்​கோ​வில் ஆகிய நிலை​யங்​களில் நின்று செல்​லும்.

மறு​மார்க்​க​மாக தென்​காசி​யில் இருந்து தாம்​பரத்​துக்கு (ரயில் எண். 06136) ஜூலை 31, ஆக. 2, 7, 9, 14, 16 ஆகிய தேதி​களில் சிறப்பு ரயில் இயக்​கப்​படும். இந்த ரயில், தென்​காசி​யில் இருந்து அதி​காலை 5 மணிக்கு புறப்​பட்டு மாலை 3.15 மணிக்கு தாம்​பரம் வந்​தடை​யும். சிறப்பு ரயி​லில் இரண்டு 3-ம் வகுப்பு ஏசி பெட்​டிகள், ஒரு ஏசி இருக்கை வசதிகொண்ட பெட்​டி, 14 இருக்கைவசதி கொண்ட பெட்​டிகள், 4 இரண்​டாம் வகுப்பு சாதாரன பெட்​டிகள் இடம் பெற்​றிருக்​கும். இந்த ரயில்​களுக்​கு முன்​ப​திவு நடை​பெற்​று வரு​கிறது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
மேகேதாட்டு விவகாரம், காவிரி நீரை திறப்பது தொடர்பாக‌ ஆகஸ்ட் 3-ல் டி.கே.சிவகுமாரை சந்திக்கிறார் முதல்வர் விஜய்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in