புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு மாற்று இடங்களில் பட்டா: சிறப்பு வரன்முறை திட்டம் ஓராண்டுக்கு நீட்டிப்பு

புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு மாற்று இடங்களில் பட்டா: சிறப்பு வரன்முறை திட்டம் ஓராண்டுக்கு நீட்டிப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் ஆட்சேபம், ஆட்சேபமற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்தி வீட்டு பட்டா வழங்கும் சிறப்பு திட்டத்தை இன்று (ஆக.31) முதல் ஓராண்டுக்கு நீட்டிக்க முடிவு செய்து அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.

இதுகுறித்து, வருவாய்த்துறை செயலர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கடந்த 2018-ம் ஆண்டு வருவாய்த்துறை வெளியிட்ட அரசாணையில் நீர்நிலைகள் போன்றஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு நிரந்தர வீடு வழங்கவும், இத்தகைய நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு உரியசெயல்பாட்டுக்கு உட்படுத்தவும், சம்பந்தப்பட்ட கிராமங்களில் வருவாய்த்துறை மூலம் தனியார் நிலங்களை கையகப்படுத்தி ஏழை குடும்பங்களுக்கு இலவசவீட்டு மனைப்பட்டா வழங்கும் சிறப்பு திட்டத்தை நெறிமுறை களுக்கு உட்பட்டு செயல்படுத்த வும் உத்தரவிடப்பட்டது.

தொடர்ந்து அதே ஆண்டு வெளியிடப்பட்ட மற்றொரு அரசாணையில், ஆட்சேபகரமற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுக்கும் மேலான குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை சில நெறிமுறைகளுக்கு உட்பட்டு வரன்முறைப்படுத்தி, தகுதியான பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாவை இலவசமாக வழங்கும் சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிடப் பட்டது.

இந்நிலையில் இந்த சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டம் ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு, இறுதியாக நேற்று (ஆக.30) வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், நில நிர்வாக ஆணையர் கடந்த ஜூலை 15-ம் தேதி அரசுக்கு எழுதிய கடிதத்தில், சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தில், தகுதியான பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க, திருச்சி, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவாரூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து முன்மொழிவுகள் வந்து பரிசீலனையில் உள்ளன. எனவே ஆக்கிரமிப்பு களை வரன்முறைப்படுத்தி பட்டா வழங்க சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கவேண்டும் என்று கோரி யிருந்தார்.

இக்கடிதத்தை பரிசீலித்த தமிழக அரசு, சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தை ஆக.31 (இன்று) முதல் ஓராண்டு நீட்டிக்கலாம் என முடிவு செய்து உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு மாற்று இடங்களில் பட்டா: சிறப்பு வரன்முறை திட்டம் ஓராண்டுக்கு நீட்டிப்பு
ஜல்லிக்கட்டை இழிவாகப் பேசினாரா தவெக எம்எல்ஏ? - அமைச்சர் நிர்மல் குமார் மறுப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in