டிஆர்பி நேரடி பணி நியமனத்​தில் பகு​திநேர ஆசிரியர்​களுக்கு சிறப்பு மதிப்​பெண்: அரசாணை வெளி​யீடு

டிஆர்பி நேரடி பணி நியமனத்​தில் பகு​திநேர ஆசிரியர்​களுக்கு சிறப்பு மதிப்​பெண்: அரசாணை வெளி​யீடு
Updated on
1 min read

சென்னை: டிஆர்பி நேரடி பணி நியமனத்​தில் பகு​திநேர ஆசிரியர்​களுக்கு சிறப்பு மதிப்​பெண் 15 வழங்கி பள்​ளிக்​கல்​வித் துறை அரசாணை வெளி​யிட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் பி.சந்​திர மோகன் நேற்று வெளி​யிட்ட அரசாணை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அரசு பள்​ளி​களில் காலி​யாக இருக்​கும் நிரந்தர சிறப்பு ஆசிரியர் பணி​யிடங்​களில், பகு​திநேர சிறப்பு ஆசிரியர்​களை நியமிக்க ஏது​வாக நேரடி நியமன தேர்​வு​களில் பகு​திநேர பணிக்​காலத்தை அடிப்​படை​யாகக் கொண்டு அவர்​களுக்கு சிறப்பு மதிப்​பெண் அளிக்​கப்​படும் என கடந்த ஜன.24-ம் தேதி சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் அறி​வித்​தார்.

இதைத்​தொடர்ந்​து, அனை​வருக்​கும் கல்வி திட்​டத்​தின்​கீழ் பணி​யாற்​றிவரும் பகு​திநேர சிறப்பு ஆசிரியர்​களுக்கு ஒவ்​வொரு பணி ஆண்​டுக்கும் ஒன்​றரை மதிப்​பெண் வீதம் அதி​கபட்​சம் 15 மதிப்​பெண் வழங்​கு​மாறு அரசுக்கு பள்​ளிக்​கல்வி இயக்​குநர் கருத்​துரு அனுப்​பி​னார்.

அதையேற்று சிறப்பு ஆசிரியர் நேரடி நியமனத்​தில் பகு​திநேர சிறப்பு ஆசிரியர்​களுக்கு ஒரு ஆண்​டுக்கு ஒன்​றரை மதிப்​பெண் வீதம் அதி​கபட்​ச​மாக 15 சிறப்பு மதிப்​பெண் அளிக்க ஆசிரியர் தேர்வு வாரி​யத்​துக்கு அனு​மதி அளித்து அரசு ஆணை​யிடு​கிறது.

இந்த சிறப்பு மதிப்​பெண் சலுகை கடந்த 2011 முதல் தொடர்ந்து பணி​யில் இருக்​கும் பகு​திநேர சிறப்பு ஆசிரியர்​களுக்கு மட்​டுமே பொருந்​தும். அதே​போல், இந்த நடை​முறை அடுத்த 5 பணிநியமன தேர்​வு​களுக்​குப் பின்​பற்​றப்​படும். இவ்​வாறு அரசாணை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

ஓவி​யம், தையல், இசை, உடற்​கல்வி உள்​ளிட்ட சிறப்பு ஆசிரியர் நியமனத்​துக்கு தற்​போது மொத்​தம் 100 மதிப்​பெண் வழங்​கப்​படு​கிறது. இதில் 95 மதிப்​பெண் எழுத்​துத் தேர்​வுக்​கானது.

எஞ்​சிய 5 மதிப்​பெண் வேலை​வாய்ப்பு அலு​வலக பதிவுமூப்​புக்கு வழங்​கப்​படும். எழுத்​துத்​தேர்​வில் தேர்ச்சி பெற்று சான்​றிதழ் சரி​பார்ப்​புக்கு அழைக்​கப்​படும்​போது வேலை​வாய்ப்பு அலு​வலக பதிவுமூப்​புக்​கான (சீனி​யாரிட்​டி) மதிப்​பெண் வழங்​கப்​படும்.

அந்த வகை​யில் தற்​போது சான்​றிதழ் சரி​பார்ப்​புக்கு வரும்​ போது வேலை​வாய்ப்பு பதிவு மூப்​புக்​கான மதிப்​பெண்​ணுடன் கூடு​தலாக சிறப்பு மதிப்​பெண்​ணாக 15 வழங்​கப்​படும் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

டிஆர்பி நேரடி பணி நியமனத்​தில் பகு​திநேர ஆசிரியர்​களுக்கு சிறப்பு மதிப்​பெண்: அரசாணை வெளி​யீடு
மின்வாரிய கணினி சேவை மேம்பாட்டுப் பணிகள்: சென்னையில் இன்றும், நாளையும் ஆன்லைன் சேவைகள் நிறுத்தம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in