தமிழகத்தில் 90 ஆயிரம் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.603 கோடி சிறப்பு ஊக்கத்தொகை

தீபாவளி முதல் விநியோகிக்க நடவடிக்கை
தமிழகத்தில் 90 ஆயிரம் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.603 கோடி சிறப்பு ஊக்கத்தொகை
Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு 2025-2026-ம் ஆண்டின் அரவைப் பருவத்துக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.603.34 கோடி வழங்கி அர சாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வேளாண் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கரும்புக்கு, முன் எப்போதும் இல்லாத வகையில் மத்திய அரசின் நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு மேல் சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.709.50 வழங்கப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவித்தார். இதன்மூலம் கரும்பு விலையாக டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதல்வரின் ஆணையின்படி 2025-26-ம் ஆண்டு அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு மாநில அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.709.50 வழங்குவதற்காக ரூ.603.34 கோடி நிதியை மாநில நிதியிலிருந்து வழங்கி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டு அக்.1 முதல் இந்த ஆண்டு செப்.30-ம் தேதி வரை சர்க்கரை ஆல களுக்குக் கரும்பு வழங்கிய விவசாயிகளின் கரும்பு எடை, ஆதார் எண், வங்கிக்கணக்கு போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான குழுவால் பரிந்துரைக்கப்பட்டு, சர்க்கரைத்துறை இயக்குநரகத்தால் கூர்ந்தாய்வு செய்யப்பட்ட பின்னர் தகுதியுள்ள விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடிப் பணப்பரிவர்த்தனை வாயிலாக சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவது தீபாவளிப் பண்டிகை முதல் தொடங்கப்படும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சுமார் 90 ஆயிரம் கரும்பு விவசாயிகள் பயனடைவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 90 ஆயிரம் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.603 கோடி சிறப்பு ஊக்கத்தொகை
‘இந்தியாவுக்கு வரவேற்கிறோம்’ - ஸ்டார்லிங்க் விவகாரத்தில் எலான் மஸ்குக்கு ராகுல் ஆதரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in