கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
Updated on: 
1 min read

சென்னை: கரும்பு டன்​னுக்கு ரூ.709.50 சிறப்பு ஊக்​கத்​தொகை வழங்​கும் பணியை முதல்​வர் விஜய் தொடங்கி வைத்​தார்.

இது​குறித்து, தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: கரும்பு விவசாயிகளின் கோரிக்​கையை ஏற்று, அவர்​களின் வாழ்​வாதா​ரத்தை மேம்​படுத்​து​வதற்​காகவும் கரும்பு உற்​பத்​தியை அதி​கரிக்​கவும் சர்க்​கரை ஆலைகளுக்​குப் பதிவு செய்து 2025-26 அரவைப் பரு​வத்​துக்​குக் கரும்பு வழங்​கிய விவசாயிகளுக்​குக் கரும்பு டன் ஒன்​றுக்கு ரூ.709.50 சிறப்பு ஊக்​கத்​தொகை​யாக வழங்​கப்​படும் என முதல்​வர் விஜய் சட்​டப்​பேரவை​யில் 110- விதி​யின் கீழ் அறி​வித்​தார்.

இதைத் தொடர்ந்து, திட்​டத்தை தொடங்கி வைக்​கும் வித​மாக தலை​மைச்​செயல​கத்தில் நேற்று 3 கரும்பு விவசாயிகளுக்கு ஊக்​கத்​தொகைக்​கான ஆணைகளை வழங்​கினார். இத்​திட்​டத்​தின் மூலம் தமிழகம் முழு​வதும் 85 ஆயிரம் கரும்பு விவசாயிகள் பயன்​பெறு​வர். இதற்​காக, நடப்பு ஆண்​டில் ரூ.603.33 கோடி அரசுக்​குக் கூடுதல் செல​வாகும்.

விவசாயிகளின் நலனையும், அவர்​களின் பொருளாதார முன்​னேற்​றத்​தையும் கருத்தில் கொண்ட தமிழக அரசின் இந்த நட​வடிக்கை, கரும்பு விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்​சி​யை ஏற்​படுத்​தியுள்ளது.

இந்நிகழ்​வில், அமைச்​சர் ர.வினோத், தலை​மைச்​செயலர் எம்.சாய்​குமார், வேளாண்​துறை செயலர் நா.வெங்​கடேஷ், சர்க் கரை ஆணை​யர் இரா.கண்​ணன், கூடுதல் இயக்​குநர் ச.அருண்​ராஜ் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
பிஎல்எம் நிதி நிறுவனத்தில் ரூ.5,000 கோடி மோசடி புகார்: 11 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

X