பிஎல்எம் நிதி நிறுவனத்தில் ரூ.5,000 கோடி மோசடி புகார்: 11 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

பிஎல்எம் நிதி நிறுவனத்தில் ரூ.5,000 கோடி மோசடி புகார்: 11 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
Updated on: 
1 min read

சென்னை: பிஎல்​எம் நிதி நிறு​வனத்​தில் ரூ.5 ஆயிரம் கோடி மோசடி புகாரில் தமிழகம், கேரளாவில் 11 இடங்​களில் அமலாக்​கத் துறை சோதனை நடத்தியுள்ளது.

பாரத் லஜ்னா மல்டி ஸ்டேட் ஹவ்​சிங் கோ ஆப்​ரேடிவ் சொசைட்டி லிமிடெட் (பிஎல்​எம்) நிறுவன அதிபர் கேரளாவைச் சேர்ந்த பிரேம்​குமார். சென்​னையை தலை​மையிடமாகக் கொண்டு 2006-ல் தொடங்​கப்​பட்ட இந்​நிறு​வனம் தமிழகம், கேரளா, புதுச்​சேரியில் செயல்​படுகிறது. பொது​மக்​களிடம் இருந்து டெபாசிட்​டாகப் பெற்ற பணத்தை பிரேம்​குமார் தனது மனைவி மற்றும் உறவினர்களின் வங்​கிக் கணக்​கு​களுக்கு மாற்​றியதாகப் புகார் எழுந்​தது.

மேலும், முதலீட்​டாளர்​களின் பணத்​தைத் தனிநபர்​கள் மற்​றும் பிற நிறு​வனங்​களுக்​குத் திருப்​பி​விட்​டதுடன், காஞ்​சியில் 300 ஏக்​கர் நிலம் வாங்​கியது, ஹோட்டல்​கள், ரிசார்ட்​டுகள், திரையரங்​கு​களில் முதலீடு செய்​தது, கேபிள் டிவி நிறு​வனம் ஒன்​றுக்கு ரூ.16 கோடி பரிமாற்​றம் செய்​தது என சுமார் ரூ.5 ஆயிரம் கோடி மோசடி​யில் ஈடுபட்​ட​தாகக் குற்​றச்​சாட்டு எழுந்​தது.

இது​தொடர்பாக கேரள பொருளாதார குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார் வழக்கு பதிந்து அக்.29-ம் தேதி சென்னை விருகம்​பாக்​கம் வீட்​டில் பிரேம்​குமாரை கைது செய்​தனர். தொடர்ந்து, கேரள நீதி​மன்​றம் அவருக்கு ஜாமீன் வழங்​கியது. இதற்​கிடையே, சட்ட​விரோத பணப்​பரிமாற்றம் தொடர்​பாக கொச்சி அமலாக்கத் ​துறையும் தனியாக வழக்​குப் பதிவு செய்து விசா​ரணையைத் தொடங்​கியது. இதன் ஒருபகுதி​யாக, நேற்று பிரேம்​குமாரின் விருகம்​பாக்​கம் வீடு, கோயம்​பேடு அலு​வல​கம், புழல் மற்​றும் கொளத்​தூரில் உள்ள டிராவல்ஸ் அதிபர் பாலாஜி​யின் அலு​வல​கம், வீடு, வேப்​பேரி​யில் உள்ள ரியல் எஸ்​டேட் மற்​றும் நிதி நிறு​வன அலு​வல​கம், வானகரம் உள்​ளிட்ட இடங்களில் சோதனை நடத்​தப்​பட்​டது.

மேலும் கோழிக்கோடு, கொச்சி உள்​ளிட்ட பகுதி​களி​லும் சோதனை நடை​பெற்​றது. இரு மாநிலங்​களி​லும் மொத்​தம் 11 இடங்​களில் நடத்​தப்​பட்ட இந்​தச் சோதனை​யில், முக்​கிய ஆவணங்​களை அமலாக்​கத்துறை அதி​காரி​கள் கைப்​பற்​றியதாக தகவல் வெளியாகி​யுள்​ளது.

பிஎல்எம் நிதி நிறுவனத்தில் ரூ.5,000 கோடி மோசடி புகார்: 11 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை அமைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

X