பொதுமக்களை அச்சுறுத்தும் ஆக்ரோஷமான நாய்களை அடைக்க பெருங்குடியில் பிரத்யேக மையம் அமைப்பு

பொதுமக்களை அச்சுறுத்தும் ஆக்ரோஷமான நாய்களை அடைக்க பெருங்குடியில் பிரத்யேக மையம் அமைப்பு
Updated on
1 min read

சென்னை: பொது​மக்​களை அச்​சுறுத்​தும் ஆக்​ரோஷ​மான நாய்​களை அடைக்க, மாநக​ராட்சி சார்​பில் பெருங்​குடி​யில் பிரத்​யேக மையம் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநக​ராட்​சிப் பகு​தி​களில் தெரு​நாய்​களின் எண்​ணிக்​கையை கட்​டுப்​படுத்த புளியந்​தோப்​பு, கண்​ணம்​மாபேட்​டை, லாயிட்ஸ் காலனி, மீனம்​பாக்​கம் மற்​றும் சோழிங்​கநல்​லூர் ஆகிய 5 இடங்​களில் ஏற்​கெனவே நாய் இனக்​கட்​டுப்​பாடு மையங்​கள் இயங்கி வரு​கின்​றன.

அதன் பிறகு செட்​டிமேடு, திரு​வொற்​றியூர், மாதவரம், தண்​டை​யார்​பேட்டை மற்​றும் கண்​ணப்​பர் திடல் என கூடு​தலாக 5 இடங்​களும் நாய் இனக்​கட்​டுப்​பாடு மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

அத்​திப்​பட்​டு, நந்​தம்​பாக்​கம், தாம்​பரம்​-வேளச்​சேரி பிர​தான சாலை, சோழிங்​கநல்​லூர் உயிரி எரி​வாயு நிலை​யம் ஆகிய 4 இடங்​களில் நாய்​கள் இனக்​கட்​டுப்​பாட்டு மையங்​கள் அமைக்​கும் பணி​கள் முழு​வீச்​சில் நடை​பெற்று வரு​கின்​றன.

மாநக​ராட்​சிப் பகு​தி​களில் சுற்​றித்​திரி​யும் நாய்​களைப் பிடித்து கருத்​தடை அறுவை சிகிச்சை மேற்​கொள்​வதற்​காக, 28 நாய் பிடிக்​கும் வாக​னங்​கள், 159 பணி​யாளர்​கள் ஈடு​படுத்​தப்​பட்​டு, நாளொன்​றுக்கு சராசரி​யாக 150 தெரு​நாய்​களுக்கு கருத்​தடை அறுவை சிகிச்​சைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.

மேலும் புதி​தாக 15 நாய் பிடிக்​கும் வாக​னங்​கள் பயன்​பாட்​டிற்கு கொண்​டு​வரப்​பட​வுள்​ளன. இது​வரை 88,240 தெரு​நாய்​களுக்கு கருத்​தடை அறுவை சிகிச்​சைகள் மற்​றும் வெறிநோய் தடுப்​பூசி அளிக்​கப்​பட்​டுள்​ளது. சிறப்​புத் திட்​டத்​தில் இது​வரை 1,47,538 தெரு நாய்​களுக்கு ரேபிஸ் நோய் தடுப்​பூசி மற்​றும் அக, புற ஒட்​டுண்ணி நீக்க மருந்து செலுத்​தப்​பட்​டுள்​ளது.

இதன் தொடர் நடவடிக்​கை​யாக, பெருநகர சென்னை மாநக​ராட்​சிப் பகு​தி​களில் வெறிநோய் பாதிப்பு (Rabies) மற்​றும் கெனைன் டிஸ்​டெம்​பர் (Canine Distemper) எனும் வைரஸ் நோயால் பாதிக்​கப்​பட்ட மற்​றும் கடிக்​கும் தன்மை கொண்ட ஆக்​ரோஷ​மான தெரு​நாய்​கள் ஆகிய​வற்றை பராமரிப்​ப​தற்​கான பிரத்​யேக தனிமைப்​படுத்​தல் மையம் (Quarantine Center) பெருங்​குடி மண்​டலம், 189-வது வார்​டு, ம.பொ.சி. நகரில் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இம்​மை​யத்​தில் நோயுற்ற 100 தெரு​நாய்​களை பராமரிப்​ப​தற்​கான இடவசதி ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது. பொது​மக்​கள் தெருநாய்கள் தொடர்​பான புகார்​களை 1913 என்ற எண்​ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்​கலாம். இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.

பொதுமக்களை அச்சுறுத்தும் ஆக்ரோஷமான நாய்களை அடைக்க பெருங்குடியில் பிரத்யேக மையம் அமைப்பு
டேட்டா சயின்ஸ், ஏரோநாட்டிக்ஸ் பிரிவுகளில் சென்னை ஐஐடியில் ஆன்லைனில் நடத்தப்படும் 4 ஆண்டு பி.எஸ். பட்டப் படிப்புகள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in