அனைத்து ரேஷன் கடைகளிலும் செப்.19-ல் விரல் ரேகை சரிபார்ப்பு சிறப்பு முகாம்

அனைத்து ரேஷன் கடைகளிலும் செப்.19-ல் விரல் ரேகை சரிபார்ப்பு சிறப்பு முகாம்
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் செப்.19-ம் தேதி விரல் ரேகை சரிபார்ப்பு சிறப்பு முகாம் நடத்தப்படும் என உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம், 2013-ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, இப்பணிகளை நிறைவு செய்யும் வகையில் செப்.19-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் (இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் மதுராந்தகம், தாராபுரம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளை தவிர்த்து) சிறப்பு முகாம் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

எனவே, தற்போது வரை நியாய விலைக் கடைகள் மூலம் கைரேகை பதிவு செய்யப்படாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி தங்களது கைரேகைப் பதிவினை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து ரேஷன் கடைகளிலும் செப்.19-ல் விரல் ரேகை சரிபார்ப்பு சிறப்பு முகாம்
பிஎப் தொகை பிடித்தம் செய்வதற்கான சம்பள உச்ச வரம்பு ரூ.25,000 ஆக உயர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in