‘ஜனநாயகன்’ பார்த்தால் மூளை சுறுசுறுப்பாகும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கருத்து

சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்

சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்

Updated on
1 min read

சென்னை: “‘ஜனநாயகன்’ படம் பார்ப்பதன் மூலம் மூளைக்கு சுறுசுறுப்பு வரும். ‘ஜனநாயகன்’ படத்திற்கும், மாணவர்களின் போராட்டத்திற்கும் சம்பந்தமில்லை” என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தொழில்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்த அரசு தயாராக இருக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்கள் விரும்பும் மாற்றங்களை செய்ய, விரல் நுணியில் விவரங்களோடு, முதல்வர் முனைப்புடன் தயாராக இருக்கிறார்” என்றார்.

பின்னர், “மாணவர்களின் போராட்டத்தை 'ஜனநாயகன்' படம் மழுங்கடித்துவிட்டதா?’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ‘ஜனநாயகன்’ படம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி ரிலீஸ் ஆகியுள்ளது. ‘ஜனநாயகன்’ படத்துக்கும், மாணவர்களின் போராட்டத்துக்கும் சம்பந்தமில்லை. ‘ஜனநாயகன்’ படம் பார்ப்பதன் மூலம் மூளைக்கு சுறுசுறுப்பும், விறுவிறுப்பும் வரும்.

மாணவர்கள் அல்லது மற்றவர்களின் மூளையை, மூளைச் சலவை செய்யும் படம் இல்லை. வார்த்தைகளின் மூலமாக செல்லுகிற பாதையின் திசையை திருப்புகிற முயற்சியில் யாரும் ஈடுபடக் கூடாது என்பதில் அக்கறையோடு இருக்கிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்</p></div>
“தர்மேந்திர பிரதான் நீக்கப்படும் வரை பேச்சுவார்த்தை இல்லை” - ராகுல் காந்தி திட்டவட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in