நீக்​கப்​பட்ட நிர்​வாகி​கள் அதே பொறுப்​பில் தொடர்​வார்​கள்: வேலுமணி, நத்​தம் விஸ்​வ​நாதன் கூட்​டாக அறிக்கை

நீக்​கப்​பட்ட நிர்​வாகி​கள் அதே பொறுப்​பில் தொடர்​வார்​கள்: வேலுமணி, நத்​தம் விஸ்​வ​நாதன் கூட்​டாக அறிக்கை
Updated on
2 min read

சென்னை: ‘அதி​முக​வில் இருந்து நிர்​வாகி​களை நீக்​கிய பழனி​சாமி​யின் அறி​விப்பு செல்​லாது. நீக்​கப்​பட்​ட​வர்​கள் அவர​வர் பொறுப்​பு​களில் தொடர்​வார்​கள்’ என அக்​கட்​சி​யின் தலைமை நிலைய செய​லா​ளர் எஸ்​.பி வேலுமணி, துணை பொதுச்​செய​லா​ளர் நத்​தம் விஸ்​வ​நாதன் ஆகியோர் கூட்​டாக தெரி​வித்​துள்​ளனர்.

இதுகுறித்து அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அதி​முக இன்று தனிப்​பட்ட சுய​லாபத்​துக்​காக​வும், பதவி வெறிக்​காக​வும் செயல்​படும் ஒரு சில​ரால் இந்த எஃகுக் கோட்​டை​யின் அடித்​தளம் அசைத்​துப் பார்க்​கப்​படு​கிறது. தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக தோல்​வியை சந்​தித்​தது.

அதைத்​தொடர்ந்​து, பெரும்​பான்​மை​யான சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களும், முக்​கிய நிர்​வாகி​களும் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமியைச் சந்​தித்​து, அவரது தன்​னிச்​சை​யான முடிவு​களால்​தான் இந்​தத் தோல்வி நேர்ந்​தது என்று கூறி, தோல்விக்​கான காரணத்தை ஆராய அவசர பொதுக்​குழு மற்​றும் செயற்​குழு​வைக் கூட்ட வலி​யுறுத்​தினோம். முக்​கிய​மாக திமுக​வுடன் கூட்​டணி வேண்​டாம் என்​றும் வலி​யுறுத்​தினோம்.

இதற்கு பொதுச் செய​லா​ளர் உடன்​ப​டாத​தால் கருத்து வேறு​பாடு தொடங்​கியது. கடந்த 11-ம் தேதி அன்று பழனி​சாமி, தற்​காலிக பேர​வைத் தலை​வரை சந்​தித்து 17 சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் ஆதரவு இருப்​ப​தாக மனு அளித்​ததன் மூலம் இந்​தப் பிளவு பொது​வெளி​யில் தெரிந்​தது. அதனால், 30 உறுப்​பினர்​கள் எங்​கள் தரப்பு ஆதர​வுக் கடிதத்தை வழங்க வேண்​டிய அவசி​யம் ஏற்​பட்​டது.

இதன் தொடர்ச்​சி​யாக, கட்​சி​யின் முன்​னோடிகள் உள்​ளிட்ட 28 பேரை ஒரே கையெழுத்​தில் நீக்கி பழனி​சாமி அறி​வித்​துள்​ளார். தேர்​தல் ஆணைய மற்​றும் நீதி​மன்ற சட்​டப்​படி, ஒரு இயக்​கத்​தில் பிளவு ஏற்​பட்ட நிலை​யில், ஒரு​வரை நீக்​கவோ அல்​லது சேர்க்​கவோ இரு பிரி​வினருக்​கும் அதி​காரம் கிடை​யாது.

கடந்த 2017-ம் ஆண்​டிலும் இதே​போன்ற அறி​விப்​பு​கள் செல்​லாது என்று நீதி​மன்​றத்​தா​லும், தேர்​தல் ஆணை​யத்​தா​லும் அறிவிக்​கப்​பட்​டது. எனவே, பழனி​சாமி வெளி​யிட்ட பதவி நீக்க அறி​விப்​பு​கள் செல்​லாது. நீக்​கப்​பட்​ட​வர்​கள், அவர்​கள் வகித்த அதே பொறுப்​பு​களில் தொடர்​வார்​கள். இவ்​வாறு அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

பழனி​சாமி அழைத்​தால் பேச தயார்

எஸ்​.பி.வேலுமணி வெளி​யிட்​டுள்ள மற்​றொரு அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, உண்மை நிலையை இந்த நேரத்​தி​லும் உணராமல் அறிக்கை விட்​டிருப்​பது என்​பது மிகுந்த வருத்​தம் அளிக்​கிறது. தங்​களின் வார்த்​தைகளை, தம்​பிகளாக நாங்​களும் ஏற்​றுக்​கொண்டு செயல்​பட்​டோம். ஆனால் தோல்வி வந்த பிறகு, தலைமை பொறுப்​பில் இருப்​பவர் இறங்கி வந்து எல்​லோரிட​மும் பேச முன்​வந்​திருக்க வேண்​டும். அதை விடுத்து எப்​போதும் போல ‘நான் மட்​டுமே எல்​லாம்’ என்ற நிலை​யில் பேசிக் கொண்​டிருப்​பதை உணர்​வுள்ள எந்த அதி​முக தொண்​ட​னும் ஏற்​றுக்​கொள்ள மாட்​டான்.

மக்​கள் ஆதரவு பெற்ற தவெக அரசுக்கு ஆதரவு அளிப்​பது என்ற அரசி​யல் அறத்​தோடு அதி​முக​வின் ஆதரவை பெரும்​பான்மை சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் வழங்​கி​யுள்​ளோமே தவிர, யாரை​யும் அவமரி​யாதை செய்​யும் எண்​ணமோ, அதி​முகவை பிரிக்​கும் எண்​ணமோ எங்​கள் யாருக்​கும் இல்​லை. இப்​போதும் நீங்​கள் அழைத்​தால், பேச நாங்​கள் தயார்.

தோல்விக்​கான காரணங்​களை எல்​லோரும் சேர்ந்து ஆராய்​வோம். அதி​முக​வின் எதிர்​காலப் பாதையை அனை​வரும் ஒன்​றிணைந்து தீர்​மானிப்​போம். தங்​களிடம் நாங்​கள் கேட்​பது ஒன்​று​தான். ‘போங்க போங்க’ என்று எப்​போதும் போல விரட்​டியடிக்​காமல், ‘வாங்க வாங்க’ என்று ஒரு​முறை அழைத்து பாருங்​கள். எல்​லாமே மாறும்.. கட்​சி​யும் நல்லா இருக்​கும்​. இவ்​வாறு அறிக்​கை​யில்​ கூறப்​பட்​டுள்​ளது.

நீக்​கப்​பட்ட நிர்​வாகி​கள் அதே பொறுப்​பில் தொடர்​வார்​கள்: வேலுமணி, நத்​தம் விஸ்​வ​நாதன் கூட்​டாக அறிக்கை
வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in