‘மது இல்லா தமிழகம்' இயக்கம் தொடங்கினார் சவுமியா அன்புமணி

மகாத்மா காந்தியின் 158-வது பிறந்தநாளை முன்னிட்டு, ‘மது இல்லா தமிழகம்’ என்ற புதிய இயக்கத்தை பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி நேற்று சென்னையில் தொடங்கி வைத்தார். படம்: எல்.சீனிவாசன்

மகாத்மா காந்தியின் 158-வது பிறந்தநாளை முன்னிட்டு, ‘மது இல்லா தமிழகம்’ என்ற புதிய இயக்கத்தை பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி நேற்று சென்னையில் தொடங்கி வைத்தார். படம்: எல்.சீனிவாசன்

Updated on: 
1 min read

சென்னை: மது இல்லா தமிழகம் என்ற பு​திய இயக்​கத்தை பாமக சட்​டப்பேரவைக் குழுத் தலை​வரும், பசுமைத் தாயகம் அமைப்​பின் தலை​வரு​மான சவுமியா அன்​புமணி சென்னையில் நேற்று தொடங்​கினார்.

இந்த நிகழ்​வில் சவுமியா அன்​புமணி பேசி​ய​தாவது: இது ஒரு அரசி​யல் சார்​பற்ற இயக்​கம். இந்த இயக்​கத்​துக்கு அனை​வரும் ஆதரவு தர வேண்​டும். இதன்​மூலம் நல்ல சமு​தா​யத்தை உரு​வாக்க முடி​யும். இந்த முறை மதுஒழிப்பு பிரச்​சா​ரத்தை தீவிர​மாக்க முடி​வெடுத்து மக்​களோடு இணைந்து வெற்றி பெறும் வகை​யில், பிரச்​சா​ரத் திட்​டத்தை வடிவ​மைக்க இருக்​கிறோம். கும்​மிடிப்​பூண்டி முதல் கன்​னி​யாகுமரி வரை பிரச்​சா​ரம் மேற்​கொண்டு மதுஒழிப்பை வலி​யுறுத்த உள்​ளோம்.

கடந்த 25 ஆண்​டு​களில் தமிழக அரசின் மது​பான வரு​வாய் 14 மடங்​கும், மது​பான விற்​பனை 5 மடங்​கும் அதி​கரித்​துள்​ளது. இரண்டு தலை​முறை​கள் மது​வுக்கு அடிமை​யாகி​யுள்​ளனர். மூன்​றாவது தலை​முறையை மதுப்​பழக்​கத்​தில் இருந்து காப்​பாற்ற வேண்​டிய கடமை நமக்கு இருக்​கிறது.

அதனால், இந்த மதுஒழிப்பு பிரச்​சா​ரத்​தில் எல்​லோரும் ஒன்றுசேர வேண்​டும். தமிழகத்​தில் மதுஒழிக்​கப்​பட்​டால்தான், பெண்​களின் வாழ்க்கை ஒளிமய​மாக மாறு​வது மட்​டுமின்​றி, அவர்​களுக்கு அதி​காரம் கிடைக்​கும். சாலை விபத்​துக்​களும், மரணங்​களும் பெரு​மளவு குறை​யும். குடிநோ​யால் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் மீட்​கப்​படு​வார்​கள். இளைய தலை​முறை காப்​பாற்​றப்​படும்.

மதுவை படிப்​படி​யாக ஒழிக்​கும் வகை​யில் டாஸ்​மாக் கடைகளுக்​கான நேரத்​தை​யும் கடை எண்​ணிக்​கை​யை​யும் குறைக்க வேண்​டும். விற்​பனைக்கு இலக்கு நிர்​ண​யிக்​கக் கூடாது. மதுஒழிப்பு கொள்​கையை தமிழக அரசு உரு​வாக்க வேண்​டும். அரசுக்கு வரு​வாய் ஈட்​டு​வதற்கு பல்​வேறு வழிகள் உள்​ளன. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

முன்னதாக பாமக பொருளாளர் தில​க​பாமா வரவேற்​றார். நிகழ்​வில் பாமக மற்​றும் பசுமைத் தாயகம் சார்​பில் நடந்த மதுஒழிப்பு போ​ராட்​டத்​தில் பங்​கேற்​று சிறை சென்​ற பெண்​கள்​ பங்​கேற்​றனர்​. இதனிடையே தைலாபுரத்தில் முதல் கையெழுத்தை போட்டு, விழிப்புணர்வு இயக்கத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், அவர் தலைமையில் மது ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை பாமகவினர் ஏற்றனர்.

<div class="paragraphs"><p>மகாத்மா காந்தியின் 158-வது பிறந்தநாளை முன்னிட்டு, ‘மது இல்லா தமிழகம்’ என்ற புதிய இயக்கத்தை பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி நேற்று சென்னையில் தொடங்கி வைத்தார். படம்: எல்.சீனிவாசன்</p></div>
ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி மும்பையில் சிஜேபி போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in