தென் கொரிய நிறுவனங்கள் தமிழகத்தில் ரூ.1,370 கோடி முதலீடு: அமைச்சர் கீர்த்தனா தகவல்

தென் கொரிய நிறுவனங்கள் தமிழகத்தில் ரூ.1,370 கோடி முதலீடு: அமைச்சர் கீர்த்தனா தகவல்
Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்​தில் ஹ்வாஷின், சியோயான் ஆகிய தென்​கொரிய வாகன உதிரி பாகத் தயாரிப்பு நிறு​வனங்​கள் அடுத்த 5 ஆண்​டுகளில் ரூ.1,370 கோடி முதலீடு செய்ய திட்​ட​மிட்​டுள்​ள​தாக தொழில் துறை அமைச்​சர் கீர்த்​தனா தெரி​வித்​துள்​ளார்.

தமிழகத்​தில் தொழில் முதலீடுகள் குறைந்து வரு​வ​தாகவும், ஆந்​திரா உள்​ளிட்ட அண்டை மாநிலங்​களுக்​குச் சில நிறு​வனங்கள் சென்று விட்ட தாகவும் தொடர் குற்​றச்​சாட்​டுகள் முன்​வைக்​கப்​பட்​டன. குறிப்பாக ஹூண்​டாய், கியா நிறுவனங்​களுக்கு உதிரிபாகங்​களை வழங்கி வரும் ஹ்வாஷின், சியோயான், ஐவாமெட் ஆகிய நிறு​வனங்கள் தங்​கள் புதிய உற்​பத்தி முதலீடுகளைத் தமிழகத்​தில் இருந்து ஆந்​திரா​வுக்கு மாற்​று​வ​தாகச் சமூக வலை​தளங்​களில் சமீபத்​தில் தகவல்​கள் வெளியாகின.

அதற்கு மாறாக ஹ்வாஷின், சியோயான் ஆகிய நிறு​வனங்​கள் தமிழகத்​தில் தொடர்ந்து தொழில் விரிவாக்​கம் செய்ய திட்​ட​மிட்​டுள்​ளன. இதன்படி இதற்​கான விருப்​பக் கடிதங்​களைத் தமிழக அரசிடம் நேற்று சமர்ப்​பித்​தன. அதன்​படி இருங்​காட்​டுக்​கோட்டை சிப்காட் தொழிற்பூங்​கா​வில் செயல்​பட்டு வரும் ஹ்வாஷின் நிறு​வனம், அடுத்த 5 ஆண்​டுகளில் சுமார் ரூ.850 கோடி முதலீடு செய்ய திட்​ட​மிட்​டுள்​ளது. மேலும், சியோயான் நிறுவனம் 2031-ம் ஆண்டு வரை ரூ.520 கோடி முதலீடு செய்​ய​வுள்​ளது.

இது​குறித்து அமைச்​சர் கீர்த்​தனா தனது எக்ஸ் தள பதி​வில் கூறியுள்​ள​தாவது: தமிழகத்தில் ஹ்வாஷின் (Hwashin), சியோயான் (Seoyon) ஆகிய நிறு​வனங்​கள், அடுத்த 5 ஆண்​டுகளில் ரூ.1,370 கோடி புதிய முதலீடுகளை மேற்​கொள்ள திட்​ட​மிட்​டுள்​ளன. இதன்​மூலம் மாநிலத்தின் மீதான தங்​கள் நம்​பிக்​கையை மீண்​டும் அவர்கள் உறுதிப்​படுத்​தி​யுள்​ளனர். முதல்வர் விஜய் தலை​மையில் தொழில் நிறு​வனங்​கள் வளர்ச்சி பெறவும், புதிய கண்​டு​பி​டிப்​பு​களை உரு​வாக்கி வேலை​வாய்ப்​பு​களைப் பெருக்​கவும் ஏற்ற சூழலை உரு​வாக்​கு​வதிலும் கவனம் செலுத்தி வருகிறோம்.

அதேநேரம் மாநிலங்​களுக்கு இடையே ஆரோக்​கிய​மான போட்​டியை வரவேற்​கிறோம். இது இந்​தி​யாவின் உற்​பத்​தித் திறனை மேலும் வலுப்​படுத்​தும். தமிழகத்​தின் வளர்ச்​சிப் பயணத்தை, இங்கு தொழில் தொடங்க முன்​வரும் நிறு​வனங்​களே எடுத்​துரைக்​கின்​றன. தொடர்ந்து முதலீடுகளைக் கொண்டு வரு​வோம். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

தென் கொரிய நிறுவனங்கள் தமிழகத்தில் ரூ.1,370 கோடி முதலீடு: அமைச்சர் கீர்த்தனா தகவல்
தாம்பரம் ரயில் நிலையத்தில் 9 மின்தூக்கி, 10 நகரும் படிக்கட்டு அமைக்கும் பணி தீவிரம்
தென் கொரிய நிறுவனங்கள் தமிழகத்தில் ரூ.1,370 கோடி முதலீடு: அமைச்சர் கீர்த்தனா தகவல்
“இறைவன் அனைவருக்கும் உரியவர்” - அயோத்தி பயணம் குறித்து அகிலேஷ் யாதவ் கருத்து

X