“இறைவன் அனைவருக்கும் உரியவர்” - அயோத்தி பயணம் குறித்து அகிலேஷ் யாதவ் கருத்து

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்

Updated on: 
1 min read

லக்னோ: அடுத்த மாதம் அயோத்திக்கு பயணம் மேற்கொள்ள அகிலேஷ் யாதவ் திட்டமிட்டுள்ளார். இதனை பாஜக விமர்சித்து வருகிறது. இந்நிலையில், “இறைவன் அனைவருக்கும் உரியவர்” என்று அகிலேஷ் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 12-ம் தேதி அன்று அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயிலுக்கு குடும்பத்துடன் பயணிக்க சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் திட்டமிட்டுள்ளார். அவரது இந்த பயணத்தை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. இதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பதாக பாஜக பிரமுகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

கடந்த 1990-ல் அயோத்தியில் கர சேவகர்கள் மீது உத்தர பிரதேசத்தில் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தப்பட்டது. அதற்கு காரணமானவர்கள் டிசம்பரில் அயோத்திக்கு வருகை தர திட்டமிட்டுள்ளனர். அவர்கள் அயோத்திக்கு வருவதற்கு முன் கர சேவகர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கடந்த சனிக்கிழமை அன்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்கு அகிலேஷ் பதில் அளித்துள்ளார். “இறைவன் அனைவருக்கும் உரியவர். அப்படி இருக்கும் நிலையில் நாங்கள் ஏன் மதுரா, பிருந்தாவனம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லக் கூடாது. இதற்கு முன்பும் இங்கு நாம் சென்றுள்ளோம். அந்த வகையில் வரும் நாட்களிலும் அங்கு செல்வோம். இதற்கு சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாடி அழித்தவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

2027 தேர்தலில் உத்தர பிரதேச மக்கள் மாற்றத்தை விரும்புகிறன்றனர். சமாஜ்வாதி ஆட்சி அமைக்கும். பாஜக ஆட்சி முடிவுக்கு வரும். மோசடி மூலம் தேர்தலில் பாஜக வெற்றி பெறுகிறது. எஸ்.ஐ.ஆர் மூலம் பாஜக வஞ்சகம் செய்கிறது. களத்தில் தோல்வியை பாஜக எதிர்கொண்டுள்ளது. அதனால் தான் அவர்களது பேச்சு அந்த வகையில் அமைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்</p></div>
செறிவூட்டப்பட்ட அணுசக்தி துகளை வெளியேற்ற ஈரான் மறுப்பு

X