தென் கொரியாவில் சிவகாசி பட்டாசுகளை காட்சிப்படுத்த அனுமதி பெறப்பட்டுள்ளது: அமைச்சர் கீர்த்தனா தகவல்

அமைச்சர் கீர்த்தனா

அமைச்சர் கீர்த்தனா

Updated on
1 min read

சிவகாசி: தென்​கொரி​யா​வில் சிவ​காசி பட்​டாசுகளை காட்​சிப்​படுத்த அனு​மதி பெறப்​பட்​டுள்​ள​தாக தொழில்​துறை அமைச்​சர் கீர்த்​தனா தெரி​வித்​தார்.

சிவ​காசி​யில் டான்​பாமா அலு​வல​கத்​தில் பட்​டாசு உற்​பத்​தி​யாளர்​கள் உடன் தொழில்​துறை அமைச்​சர் கீர்த்​தனா ஆலோ​சனை நடத்​தி​னார். அப்​போது பட்​டாசு உற்​பத்​தி​யாளர் சங்​கங்​கள் சார்​பில் பட்​டாசு ஏற்​றும​திக்கு அனு​மதி அளிக்க வேண்​டும். ஏற்​றும​திப் பொருட்​களில் ஆரஞ்சு நிறப் பிரி​வில் உள்ள பட்​டாசை வெள்ளை அல்​லது பச்சை நிற பிரிவுக்கு மாற்ற வேண்​டும். அரசு ஆவணங்​களில் பட்​டாசுத் தொழிலை அரு​வருக்​கத்​தக்க இழி​வானது எனக் குறிப்​பிடப்​பட்​டுள்​ளதை மாற்ற வேண்​டும்.

ஜிஎஸ்டி வரி பகிர்​வில் உள்ள குளறு​படிகளைக் களைய வேண்​டும். சிவ​காசி​யில் லாரி முனை​யம் அமைக்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட 20 கோரிக்​கைகளை முன்​வைத்து அமைச்​சரிடம் மனு அளித்​தனர். பின்​னர் அமைச்​சர் கூறிய​தாவது: சமீபத்தில் அரசு​முறைப் பயணமாக தென்​கொரியா சென்​ற​போது பட்​டாசு ஏற்​றுமதி செய்​வது தொடர்​பாக அங்​குள்ள தூதரகத்​தில் பேச்​சு​வார்த்தை நடத்​தினேன். தென்​கொரி​யா​வில் சிவ​காசி பட்​டாசுகளைப் பயன்​படுத்த வேண்​டு​கோள் விடுத்​துள்​ளேன். அதற்கான வாய்ப்​பாக அங்குசிவ​காசி பட்​டாசுகளைக் காட்​சிப்​படுத்த அனு​மதி பெறப்​பட்​டுள்​ளது.

பட்​டாசுத் தொழில் தொடங்க ஒற்​றைச்​சாளர முறை​யில் அனு​மதி வழங்க குழு அமைக்​கப்​படும். விதி​மீறல் காரண​மாக உரிமம் தற்​காலிக​மாக ரத்து செய்​யப்​படும். பட்​டாசு ஆலைகளை குறிப்​பிட்ட காலத்​துக்​குள் திறக்​கும் வகை​யில் சட்​டத்​ திருத்தம் கொண்​டுவர முயற்சி எடுக்​கப்​படும். போலந்து நாட்​டில் ஒரே ஒரு வாடிக்​கை​யாளர் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு சிவ​காசி பட்​டாசுகளை இறக்​குமதி செய்​யத் தயா​ராக உள்​ளார். சீனா​வுக்கு நிக​ராக சிவ​காசி பட்​டாசுகளை ஏற்​றுமதி செய்​வதற்​கான கொள்கை முடிவு உரு​வாக்கி சிவ​காசியை வளர்ச்சி அடையச் செய்​வேன். இவ்​வாறு அவர் கூறி​னார்.

<div class="paragraphs"><p>அமைச்சர் கீர்த்தனா</p></div>
“லஞ்சம், ஊழல்தான் செய்யக் கூடாது; சிபாரிசு செய்வதில் தவறில்லை” - அமைச்சர் விஸ்வநாதன் கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in