பக்ரீத்தை முன்னிட்டு அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர பொது இடங்களில் கால்நடைகளை வெட்ட தடை

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழு​வதும் அனு​ம​திக்​கப்​பட்ட இடங்​களைத்​தாண்டி பொது இடங்​களில் மாடு​கள் உள்ளிட்ட விலங்குகளை வெட்ட அனு​ம​திக்​கக்​கூ​டாது என உயர் நீதி​மன்​றம் தடை விதித்​துள்​ளது.

இதுதொடர்​பாக இந்து மக்​கள் கட்​சி​யின் இளைஞரணி பொதுச் செய​லா​ள​ரான கோவை மாவட்​டம் செல்​வபுரத்​தைச் சேர்ந்த கே. சூர்ய பிர​சாந்த் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், `பக்​ரீத் பண்​டிகையை முன்​னிட்டு கடந்​தாண்டு கோவை செல்​வபுரத்​தில் மாடு​கள் வெட்ட தனி​யாக தகர கொட்​டகைகள் அமைக்​கப்​பட்​டிருந்​தன.

இதுதொடர்​பாக புகார் அளித்​த​தால் போலீ​ஸார் அங்கு வந்து 7 மாடு​களை மீட்​டனர். இந்​தாண்​டும் பக்​ரீத் பண்​டிகை மே 28 (இன்​று) கொண்​டாடப்​பட​வுள்ள சூழலில் கோவை​யில் துடியலூர் சந்​தை, உக்​கடம், ரத்​தினபுரி மசூ​தி, செல்​வபுரம், குனிய​முத்​தூர், போத்​தனூர் போன்ற பல்​வேறு இடங்​களில் மாடு​கள் வெட்​டப்​பட​வுள்​ளன. அனு​ம​திக்​கப்​பட்ட இடங்​களைத்​தாண்டி பொது இடங்​களில் மாடு​களை வெட்​டக்​கூ​டாது என்​றும், மாடு​களை வெட்​டும் முன்​பாக அவை முழு​மை​யான மருத்​துவ பரிசோதனைக்கு உட்​படுத்​தப்​பட்​டதா என்​றும், கன்​றுக்​குட்​டிகள் வெட்​டப்​படு​கின்​றனவா என்​றும் சோதிக்க அதி​காரி​களுக்கு உத்​தர​விட வேண்​டும்' என அதில் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், வி. லட்​சுமி​நா​ராயணன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் வழக்​கறிஞர் என்​.சேஷாத்​ரி​யும், அரசு தரப்​பில் கூடு​தல் தலைமை வழக்​கறிஞர்​கள் பி.வி.​பாலசுப்​பிரமணி​யம், டி.க​வுதமன், மாநில அரசு தலைமை குற்​ற​வியல் வழக்கறிஞர் ஜான் சத்​யன் ஆகியோர் ஆஜராகி வாதிட்​டனர்.

அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள், ``ஏற்​கெனவே சென்னை உயர் நீதி​மன்​றம் கடந்த 2020-ம் ஆண்டு பொதுஇடங்​களில் மாடு​களை வெட்​டக்​கூ​டாது என தடை விதித்​துள்​ளது. 1976-ம் ஆண்டு தமிழக அரசும் பசுவதையை தடை செய்து அரசாணை பிறப்​பித்​துள்​ளது. எனவே, தமிழகம் முழு​வதும் பக்​ரீத் பண்​டிகை மட்​டுமல்​லாது மற்ற நாட்​களி​லும் அனு​ம​திக்​கப்​பட்ட இடங்​களைத் தவிர்த்து பொது இடங்​களில் மாடு​கள் உள்​ளிட்ட எந்​தவொரு விலங்​கினங்​களை​யும் வெட்​டக்​கூ​டாது. அவ்​வாறு பொதுஇடங்​களில் மாடு​கள் வெட்​டப்​பட​வில்லை என்​பதை தமிழக அரசின் தலை​மைச் செயலரும், சட்​டம் - ஒழுங்கு கூடு​தல் டிஜிபி​யும் உறுதி செய்ய வேண்​டும்​,என தடை வி​தித்​து உத்​தர​விட்​டுள்​ளனர்​.

<div class="paragraphs"><p>சென்னை உயர் நீதிமன்றம்</p></div>
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கோரி பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் அளித்த நீண்ட கடிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in