கிளாம்பாக்கத்தில் விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது ரயில், பேருந்து நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை!

கிளாம்பாக்கத்தில் விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது ரயில், பேருந்து நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை!
Updated on
2 min read

கிளாம்பாக்கம்: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பேருந்து நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை ரூ.79 கோடியில் கட்டப்பட்டு வரும் நிலையில், வரும் மார்ச் மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் முதல் கிளாம் பாக்கம் பேருந்து நிலையம் வரையும் ஜி,எஸ்,டி சாலையை கடக்கவும் ஆகாய நடைபாதை ரூ.79 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. 279 மீட்டர் நீளமும் 8 மீட்டர் அகலமுடன் அமைக்கப்படுகிறது.

இந்த ஆகாய நடைபாதை பணிகளுக்கான ஆலோசகராக ஐஐடி மதராஸ் சார்ந்த நகர்ப்புறமயமாக்கல், கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (CUBE) நியமிக்கப்பட்டு அவர்கள் தெரிவித்த ஆலோசனைப்படி பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் எளிதாக பயன்படுத்தவும் பயணிகள் வசதிக்காகவும் சாலையை கடக்க இரு முனைகளிலும் 6 நகரும் படிக்கட்டுகள், 4 லிப்ட்கள் மற்றும் வழுக்காத தரைத்தளம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மாநகர பேருந்து நிறுத்தம் அருகே உள்ள நடைபாதையின் தளம், இருக்க வேண்டிய மட்டத்தைவிட சற்று அதிகமாக கீழ்நோக்கி இருப்பதால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக புகார் எழுந்தது.

இதனால் ஆகாய நடைபாதை பணியை பரிசோதித்த ஐஐடி மெட்ராஸ் ‘கியூப்’ (CUBE) அமைப்பு ஆய்வு செய்து சில மாற்றங்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதனை முற்றிலும் சி.எம்.டி. ஏ அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

<div class="paragraphs"><p>கிளாம்பாக்கம் ரயில் நிலையம், பேருந்து நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை பணிகள். | <em>படங்கள்: எம்.முத்துகணேஷ்</em> |</p></div>

கிளாம்பாக்கம் ரயில் நிலையம், பேருந்து நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை பணிகள். | படங்கள்: எம்.முத்துகணேஷ் |

ஐஐடி மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் ‘கியூப்’ (CUBE) அமைப்பு தெரிவித்த ஆலோசனையின் படியே பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சி.எம்.டி.ஏ அதிகாரி ஒருவர் கூறியது: பயணிகள் வசதிக்காக 79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்ட ஆகாய நடைபாதை கட்டப்பட்டு வருகிறது.

இந்த நடைபாதை பணிகள் ஓரளவு நிறை வடைந்திருக்கும் நிலையில் சில தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏற்பட்டதாக கூறப்படுவது உண்மையில்லை. நடைபாதை பணி ஐஐடி மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் ‘கியூப்’ (CUBE) அமைப்பு தெரிவித்த அறிக்கையின்படியே நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.

கிளாம்பாக்கத்தில் விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது ரயில், பேருந்து நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை!
ஈரான் ஆதரவு போராட்டங்களை முடக்க முயற்சி: மத்திய அரசு மீது இந்திய கம்யூ. குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in