தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கை சென்ற 6 அகதிகள் நடுக்கடலில் கைது

தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கை சென்ற 6 அகதிகள் நடுக்கடலில் கைது
Updated on
1 min read

ராமேசுவரம்: தமிழகத்​தில் இருந்து சட்​ட​விரோத​மாக படகில் சென்ற 6 அகதி​களை இலங்கை கடற்​படை​யினர் கைது செய்தனர்.

இலங்​கை​யில் ஏற்​பட்ட பொருளா​தார நெருக்​கடி காரண​மாக, கடந்த 3 ஆண்​டு​களுக்​கும் மேலாக தனுஷ்கோடிக்கு அகதி​களாக வந்த 320-க்​கும் மேற்​பட்ட இலங்​கைத் தமிழர்​களை மனிதாபிமான அடிப்​படை​யில் மண்​டபம் முகாமில் தற்காலிகமாக தமிழக அரசு தங்க வைத்​துள்​ளது.

இந்​நிலை​யில், தமிழர் மறு​வாழ்வு முகாமில் தங்கி இருந்த 6 பேர் இலங்கை செல்ல முடிவு செய்தனர். இதையடுத்து சட்​ட​விரோத​மான முறை​யில் படகு மூலம் சென்று 7-வது மணல் திட்​டில் இறங்கி உள்​ளனர். இலங்கை கடற்​படை​யினர் ரோந்​துப் பணி​யின் போது 6 பேரை​யும் மீட்டு தலைமன்​னார் காவல் நிலை​யத்​தில் ஒப்​படைத்​தனர்.

விசா​ரணை​யில் 6 பேரும் இலங்​கை​யில் பொருளா​தார நெருக்கடியின்​போது தமிழகம் வந்து மண்​டபம் முகாமில் தங்கியிருந்த முல்​லைத்​தீவு, புதுக்​குடி​யிருப்பு பகு​தியை சேர்ந்த சசிக்​கு​மார், கலைச்​செல்​வி, ரஜிதன், அபிஷேக்​ஸ்​வரன், ஸ்லியா, அக்​கினேஸ்​வரி என்​பது தெரிய​வந்​தது. அவர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர். இதனிடையே படகில் செல்ல உதவிய​வர்​கள் குறித்து விசா​ரணை நடந்து வரு​கிறது.

தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கை சென்ற 6 அகதிகள் நடுக்கடலில் கைது
நிழல் முதல்வர் ஆதவ் அர்ஜுனா: எஸ்.எஸ்.சிவசங்கர் விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in