நிழல் முதல்வர் ஆதவ் அர்ஜுனா: எஸ்.எஸ்.சிவசங்கர் விமர்சனம்

நிழல் முதல்வர் ஆதவ் அர்ஜுனா: எஸ்.எஸ்.சிவசங்கர் விமர்சனம்
Updated on
1 min read

அரியலூர்: தவெக அமைச்​சர​வை​யில் உள்ள அனை​வருமே ஜோக்கர்​கள் தான் என்​றும், நிழல் முதல்​வர் போல ஆதவ் அர்ஜூனா செயல்​படு​கிறார் என்​றும் திமுக முன்​னாள் அமைச்​சர் எஸ்​.எஸ்.​சிவசங்​கர் விமர்​சனம் செய்​தார்.

அரியலூர் மாவட்ட திமுக செயற்​குழுக் கூட்​டம் அரியலூரில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதில், மாவட்​டச் செய​லா​ள​ரும் முன்​னாள் அமைச்​சரு​மான எஸ்​.எஸ்​.சிவசங்​கர் பேசி​யது:

இந்த தேர்​தல் தோல்​வி, குறிப்​பாக கொளத்​தூர் தொகு​தி​யில் ஏற்​பட்ட தோல்வி திமுக​வினரின் ஆழ்​மன​தில் மாறா வடு​வாக பதிந்​துள்​ளது. ஆனாலும் நாம் பார்க்​காத தோல்வி அல்ல. இந்த தோல்​வியை, திமுக இன்​னும் வேக​மாக மீண்டு வரு​வதற்​கான வாய்ப்​பாகத் தான் நாம் பார்க்க வேண்​டும்.

இந்த ஆட்சி மாற்​றம், ஏதோ பெரிய மாற்​றம் அல்ல. இந்த ஆட்சி மாற்​றம் நீடித்து நிலைக்​காது. தவெக​வில் முதல்​வர் விஜய் அல்ல. ஆதவ் அர்​ஜுனா தான் நிழல் முதல்​வர் போல செயல்​படு​கிறார். 13 சீட்​டும் ஜோக்​கர் ஆக உள்​ளது போல, தற்​போதைய அமைச்​சர​வையில் உள்ள அனைவருமே ஜோக்​கர்​கள் போலத்தான் உள்​ளனர். அமைச்சர்​களுக்கு 2 மாதம் பேச பயிற்சி தந்து அதன் பிறகு அமைச்​சர​வை​யில் வாய்ப்பு அளித்​திருக்​கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

நிழல் முதல்வர் ஆதவ் அர்ஜுனா: எஸ்.எஸ்.சிவசங்கர் விமர்சனம்
பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு: காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in