

சென்னை: சட்டப்பேரவை மாற்றுத் தலைவர்களாக 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், 2-ம் நாள் நிகழ்வுகள் நேற்று நடைபெற்றன.
முன்னாள் எம்எல்ஏ.க்கள் உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையின் மாற்றுத் தலைவர்கள் பட்டியலை பேரவைத் தலைவர் ஜேசிடி.
பிரபாகர் வெளியிட்டார். சட்டப்பேரவையின் மாற்றுத் தலைவர்களாக விஜய் சரவணன் (தவெக), சத்யபாமா (தவெக), மதார் பதுருதீன் (தவெக), தாரகை கத்பர்ட் (காங்கிரஸ்), காதர் பாட்சா முத்துராமலிங்கம் (திமுக), தளவாய் சுந்தரம் (அதிமுக) ஆகிய 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பேரவைத் தலைவர் ஜேசிடி. பிரபாகர், துணைத் தலைவர் ரவிசங்கர் ஆகிய இருவரும் அவையில் இல்லாத சூழலில், பேரவையை மாற்றுத் தலைவர்கள் வழிநடத்துவார்கள்.