சென்னை பல்கலைக்கழகத்தின் 167-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் சான்றிதழ்களை ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி வழங்கி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். உடன், சிறப்பு விருந்தினர் விஞ்ஞானி சிவதாணுபிள்ளை, உயர்கல்வித் துறை செயலர் பொ.சங்கர், சென்னை பல்கலை. பதிவாளர் ரிட்டா ஜான்  உள்ளிட்டோர்.

சென்னை பல்கலைக்கழகத்தின் 167-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் சான்றிதழ்களை ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி வழங்கி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். உடன், சிறப்பு விருந்தினர் விஞ்ஞானி சிவதாணுபிள்ளை, உயர்கல்வித் துறை செயலர் பொ.சங்கர், சென்னை பல்கலை. பதிவாளர் ரிட்டா ஜான் உள்ளிட்டோர்.

ஆபரேஷன் சிந்தூரின்போது எதிரிகளை பிரம்மோஸ் ஏவுகணை சாய்த்தது: விஞ்ஞானி சிவதாணுபிள்ளை பெருமிதம்

Published on

சென்னை: ‘ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பிரம்மோஸ் எதிரிகளை ஏவுகணை சாய்த்தது’ என்று பிரம்மோஸ் முன்னாள் தலைமை செயல் அதிகாரியும், விஞ்ஞானியுமான சிவ தாணுபிள்ளை கூறினார்.

சென்னை பல்கலைக்கழகத் தின் 167-வது பட்டமளிப்பு விழா சேப்பாக்கத்தில் உள்ள வளாகத்தில் நேற்று நடைபெற்றது. ஆளுநரும், பல்கலை. வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்து, பட்டங்களை வழங்கினார்.

சென்னை பல்கலை.யின் கீழ் இயங்கும் கலை, அறிவியல் கல்லூரிகளில், 2023-24 மற்றும் 2024-25-ம் கல்வியாண்டுகளில் இளநிலை, முதுநிலை, முனைவர் படிப்புகளை முடித்த ஒரு லட்சத்து 93,686 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. பிஎச்டி.

உட்பட 1,323 மாணவர்களுக்கு ஆளுநர் நேரடியாக பட்டங்களை வழங்கினார். மதுரை சரக சிறைத்துறை டிஐஜி முருகேசன், குற்றவியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றார். மேலும், திருநங்கை மாணவி ஜென்சியும் பட்டம் பெற்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பிரம்மோஸ் முன்னாள் தலைமை செயல் அதிகாரியும், விஞ்ஞானியுமான ஆ.சிவதாணுபிள்ளை பேசிய தாவது: இன்றைய ஜென்இசட் தலைமுறையை சேர்ந்தவர்கள் ஸ்மார்ட் போன்கள் மற்றும் சமூக வலைதளங்களுடன் வளர்கின்றனர்.

இந்தியர்கள் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே தங்கள் அறிவால் உலகில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். தற்போதும் பல இந்திய அறிஞர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். 2047-ல் இந்தியா, வளர்ச்சி அடைந்த பாரதமாக மாற, நாம் சேர்ந்து உழைக்க வேண்டும். விரைவில் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக உயர்வோம்.

அதற்கு வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலைகளை உருவாக்குபவர்களாக மாறவேண்டும். விண்வெளி தொழில்நுட்பத்தைப் பொருத்தவரை நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திராயன்-3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கினோம். மேலும், ஆதித்யா எல்-1 திட்டத்தின் வாயிலாக சூரியனை ஆய்வு செய்யும் திட்டமும் மைல்கல் லாக உள்ளது.

ஏவுகணை தொழில்நுட்பத்தில் இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியான பிரம்மோஸ் பெரிய திருப்புமுனையாகும். இந்த ஏவுகணை இந்திய ஆயுதப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்வாயிலாக சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையை கொண்ட ஒரே நாடாக இந்தியா மாறி உள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பிரம்மோஸ் ஏவுகணையின் செயல் திறன் நிரூபிக்கப்பட்டது. அந்த தொழில்நுட்பம், எதிரிகளை மண்டியிட வைத்தது. இந்த ஏவுகணை, இந்திய ஆயுதப்படைக்கு கிடைத்த பிரம்மாஸ்திரம்தான். பட்டம் பெறும் மாணவர்கள், தங்கள் சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உலக வரலாற்றுப் புத்தகத்தில் உங்களுக்காக ஒரு பக்கம் எழுதப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், உயர்கல்வித் துறைச் செயலர் பொ.சங்கர், பல்கலை. பதிவாளர் ரிட்டா ஜான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அமைச்சர் புறக்கணிப்பு இந்த விழாவில் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சரும், பல்கலை. இணைவேந்தருமான கோவி.செழியன் பங்கேற்கவில்லை.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘தமிழக சட்டப் பேரவையின் மாண்பைக் கெடுக்கும் வகையிலும், தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழகத்துக்கும் எதிரான செயல்களையும் ஆளுநர் ஆர்.என். ரவி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். தமிழகமாணவர்களின் அறிவையும், திறமையையும் கொச்சைப்படுத்தி, பொய்களைப் பரப்பிவரும் ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை. எனவே, சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>சென்னை பல்கலைக்கழகத்தின் 167-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் சான்றிதழ்களை ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி வழங்கி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். உடன், சிறப்பு விருந்தினர் விஞ்ஞானி சிவதாணுபிள்ளை, உயர்கல்வித் துறை செயலர் பொ.சங்கர், சென்னை பல்கலை. பதிவாளர் ரிட்டா ஜான்  உள்ளிட்டோர்.</p></div>
டெல்லி மாநகராட்சி ஆணையராக சஞ்சீவ் கிர்வர் நியமனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in