சஞ்சீவ் கிர்வர்
டெல்லி மாநகராட்சி ஆணையராக சஞ்சீவ் கிர்வர் நியமனம்
புதுடெல்லி: டெல்லி மாநகராட்சி ஆணையராக சஞ்சீவ் கிர்வரை மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. இதற்கான கடிதத்தை டெல்லி துணை நிலை ஆளுநர் ஒப்புதலுக்காக மத்திய உள்துறை இயக்குநர் அனீஷ் முரளிதரன் அனுப்பினார்.
சஞ்சீவ் கிர்வர் 1994-ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி. இவர் கடந்த 2022-ம் ஆண்டு டெல்லி வருவாய்த் துறை முதன்மை செயலாளராக பணியாற்றினார். அப்போது இவர் தனது நாயுடன் டெல்லி தியாகராஜ் அரங்கத்தில் நடை பயிற்சிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இவருக்காக விளையாட்டு வீரர்கள் தங்கள் பயிற்சியை சீக்கிரம் முடிக்க வற்புறுத்தப்பட்டதாக செய்தி வெளியானது.
இந்த சர்ச்சையால் இவர் லடாக்குக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இவர் டெல்லியில் ஏற்கெனவே பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் வர்த்தகம், சுகாதாரத்துறை அமைச்சகம் ஆகியவற்றில் செயலாளராக பணியாற்றியுள்ளார்.
