மதுரை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ.க்கு தொகுதியே கிடைக்காத சூழல்!

மதுரை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ.க்கு தொகுதியே கிடைக்காத சூழல்!
Updated on
1 min read

மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீட்டு எண்ணிக்கை குறைந்ததால் இந்த முறை மதுரை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட போட்டியிட முடியாத சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் கடந்த 2021-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிட்டு கந்தர்வகோட்டை, கீழ்வேளூர் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது.

2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கூடுதல் தொகுதிகளை, திமுகவிடம் கேட்டு வந்தது. ஆனால் திமுகவோ, கடந்த முறை போட்டியிட்டதைவிட ஒரு தொகுதியை குறைத்து வழங்கி கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது.

முதலில் முரண்டுபிடித்த மார்க்சிஸ்ட் கட்சி, எண்ணிக்கையை விட்டுக் கொடுக்கலாம், கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது என்ற அடிப்படையில், அதிமுக-பாஜக கூட்டணிக்கு தங்கள் நிலைப்பாடு சாதகமாகிவிடக் கூடாது என்பதற்காக திமுக தலைமை வழங்கிய 5 தொகுதி களை பெற்றுக்கொண்டது.

தொகுதிகள் எண்ணிக்கை குறைந் துள்ளதால் மதுரை மாவட்டத்தில் இந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடுவது சந்தேகம் என்றும், கடந்த முறை மார்க்சிஸ்ட் போட்டியிட்ட திருப்பரங்குன்றத்தில் இம்முறை திமுகவே களம் இறங்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறுகையில், 2021-ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்ற கந்தர்வகோட்டை, கீழ்வேளூர் ஆகிய தொகுதிகளையும் சேர்த்து மதுரை, கோவை, சென்னையில் தலா ஒரு தொகுதிகளில் போட்டியிட கட்சி திட்டமிட்டுள்ளது.

எக்காரணம் கொண்டும் மதுரையில் போட்டி யிடுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தவிர்க்காது. கடந்த முறை பெற்ற ஒரு தொகுதியை பெற்றே தீருவோம். அது எந்த தொகுதி என உறுதியாகவில்லை, என்றனர்.

திமுகவினர் கூறுகையில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்த முறை 5 தொகுதிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால் ஏற்கெனவே எம்எல்ஏ-க்கள் உள்ள 2 தொகுதிகள், மீதமுள்ள தொகுதிகளை மற்ற மாவட்டங்களில் வழங்குவதற்கு கட்சித்தலைமை முடிவு செய்துள் ளதாக தெரிகிறது. இதனால் மதுரை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் போட்டி யிடுவது சந்தேகமே’ என்றனர்.

மதுரை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ.க்கு தொகுதியே கிடைக்காத சூழல்!
“திமுக 175 தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் போட்டி” - மு.க.ஸ்டாலின்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in