

சென்னை: பூர்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆர் விண்ணப்பங்களை ஒப்படைக்க டிச.,11-ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம், கேரளா, மேற்குவங்கம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், என 9 மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய 3 யூனியன் பிரதேசங்களுக்கும் இந்த கால அவகாசம் நீட்டிப்பு பொருந்தும் என தேர்தல் ஆணைய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 4 ஆம் தேதி முதல் எஸ்.ஐ.ஆர் என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கின. இந்தப் பணிகளில் தமிழகம் முழுவதும் 68,470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ.) ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதல் நாளில் இருந்தே வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கொடுத்து வருகின்றனர்.
ஆனால், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணிகளில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளது எனக்கூறி திமுக எதிர்ப்பு தெரிவித்து வருவது கவனிக்கத்தக்கது.
இந்நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆர் விண்ணப்பங்களை ஒப்படைக்க டிச.,11-ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தவிட்டுள்ளது.
அதாவது, எஸ்ஐஆர் நடைமுறைகள் டிசம்பர் 4 ஆம் தேதியுடன் முடிவடையவிருந்த நிலையில், மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், வரைவு வாக்காளர் பட்டியல் டிச.16-ம் தேதியும், வாக்காளர் இறுதிப் பட்டியல் பிப்.14 -ம் தேதியும் வெளியாகும்என அறிவிக்கப்பட்டுளது.