சாதாரண பிரச்சினைகளில் கூட குண்டர் சட்டம் பயன்படுத்துவதா? - டிஜிபி பதிலளிக்க ஐகோர்ட் ஆணை

சாதாரண பிரச்சினைகளில் கூட குண்டர் சட்டம் பயன்படுத்துவதா? - டிஜிபி பதிலளிக்க ஐகோர்ட் ஆணை
Updated on
1 min read

மதுரை: மதுரையைச் சேர்ந்த பிடிஆர் வினோத் என்​பவர் மீது கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழிப்​பறி, கத்​தி​யால் தாக்​கிய​தாக வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது. இதனை அடிப்​படை​யாகக் கொண்​டு, அவர் குண்​டர் சட்​டத்தின்​கீழ் சிறை​யில் அடைக்கப்பட்​டார். இதை ரத்து செய்​யக்​கோரி உயர் நீதி​மன்ற மதுரை அமர்வில் ஆட்​கொணர்வு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.

இம்​மனு, நீதிப​தி​கள் என்​. ஆனந்த் வெங்​கடேஷ், பி.தன​பால் அமர்வு முன் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, மனு​தா​ரர் மீது சுமத்​தப்​பட்ட குற்​றச்​சாட்டு சாதாரண சட்​டம், ஒழுங்கு சார்ந்த பிரச்​சினையே தவிர, பொது அமை​தி​யை பாதிக்​கும் அளவுக்​கானதல்ல.

இதற்காக உடனடி​யாக குண்​டர் சட்​டத்​தைப் பயன்​படுத்​து​வது தேவையற்​றது. மனு​தா​ரரை குண்​டர்தடுப்புச் சட்​டத்​தின்​கீழ் கைது செய்​ததற்கு போதிய முகாந்​திரம் இல்​லை. எனவே குண்​டர் சட்​டத்தை ரத்து செய்வதாக நீதிபதிகள் உத்​தரவிட்​டனர்.

இனி வரும் காலங்​களில் ஒரு முறை​யான வழி​முறையை உரு​வாக்க வேண்​டும். இது குறித்து டிஜிபி அறிக்கை தர ​உத்தர​விட்டு வழக்கை ஏப்​.7-ம் தேதிக்கு தள்​ளி​வைத்​தனர்.

சாதாரண பிரச்சினைகளில் கூட குண்டர் சட்டம் பயன்படுத்துவதா? - டிஜிபி பதிலளிக்க ஐகோர்ட் ஆணை
எங்கே இருக்கிறார் நெதன்யாகு? - ‘ஆறு விரல்’ வீடியோவால் சர்ச்சை!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in