தீபாவளி நெருங்கும் நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு தட்டுப்பாடு

தீபாவளி நெருங்கும் நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு தட்டுப்பாடு
Updated on: 
1 min read

செங்கல்பட்டு: தீபாவளி பண்​டிகை நெருங்கி வரும் நிலை​யில், செங்​கல்​பட்டு மாவட்​டம் முழு​வதும் உள்ள ரேஷன் கடைகளில் பாமா​யில், துவரம் பருப்பு தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ள​தாகப் புகார் எழுந்​துள்​ளது.

தமிழகத்​தில் குடும்ப அட்​டை​தா​ரர்​களுக்கு ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, கோது​மை, துவரம் பருப்​பு, பாமாயில் உள்​ளிட்ட அத்​தி​யா​வசி​யப் பொருட்​கள் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன.

குறிப்​பாக துவரம்பருப்பு மற்​றும் பாமா​யில் ஆகியவை ஏழை, எளிய மற்​றும் நடுத்​தரக் குடும்​பங்​களின் அன்​றாட சமையல் தேவைக்கு மிக​வும் அவசி​ய​மான பொருட்​களாக உள்​ளன.

தீபாவளி பண்​டிகைக்கு இன்​னும் சில நாட்​களே உள்ள நிலை​யில், செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் பல்​வேறு பகு​தி​களில் உள்ள ரேஷன் கடைகளில் பாமா​யில், துவரம் பருப்பு வழங்​கப்​பட​வில்லை என பொது​மக்​கள் புகார் தெரிவிக்​கின்​றனர்.

கடை ஊழியர்​களிடம் கேட்​டால், இருப்பு இல்லை என்​றும் சரக்கு வந்​தவுடன் வழங்​கப்​படும் என்​றும் தெரி​விப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. இதனால் மீண்​டும் மீண்​டும் ரேஷன் கடைக்​குச் சென்று பொருட்​கள் வந்​துள்​ளதா என்று கேட்க வேண்​டிய நிலை ஏற்​பட்​டுள்​ளது.

எனவே செங்​கல்​பட்டு மாவட்​டம் முழு​வதும் உள்ள ரேஷன் கடைகளின் இருப்பு நிலையை ஆய்வு செய்​து, தட்​டுப்​பாடின்றி பாமா​யில், துவரம் பருப்பு விநி​யோகம் செய்​யத் தேவை​யான நடவடிக்​கைகளை உணவுப் பொருள் வழங்​கல் துறை அதி​காரி​கள் மேற்​கொள்ள வேண்​டும்.

தீபாவளி பண்​டிகைக்கு முன்​பாக அனைத்​துக் குடும்ப அட்​டை​தா​ரர்​களுக்​கும் உரிய பொருட்​கள் கிடைப்​பதை உறுதி செய்ய வேண்​டும் என மக்​கள் எதிர்​பார்க்​கின்​றனர்​.

தீபாவளி நெருங்கும் நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு தட்டுப்பாடு
போதை மாத்திரைகள் விற்பனையில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தியவர் கைது: 300 மாத்திரைகள், பைக், செல்போன் பறிமுதல்

X